ஹாலிவுட் போகும் தமிழ் ஹீரோ தாஜ்மகாலில் முகாம்..

by Chandru, Dec 21, 2020, 13:18 PM IST

நடிகர் தனுஷ் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு தாவி இருக்கிறார். ஏற்கனவே தி எக்ஸ்டர்னரி ஜர்னி ஆப் ஃபக்ரி என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ். இப்படத்தை கென் ஸ்காட் இயக்கினார். இப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இந்நிலையில் தி க்ரே மேன் என்ற புதிய ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கிறார், இப்படத்தை தி அவென்ஞ் சர்ஸ் என்ட் கேம் படத்தை இயக்கிய ஆண்டனி ருஸ்ஸோ, ஜோயி ருஸ்ஸோ இயக்குகின்றனர். இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் வர்னர் மவுரா, ஜெஸ்ஸிகா ஹென்விக், ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் மதுரையில் ஆனந்த் எல் ராயின் பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இப்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக படக்குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது. பாலிவுட் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் தனுஷ், அக்‌ஷய்குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் குறித்த சமீபத்திய அப்டேட் என்னவென்றால், இந்தகுழு இன்று முதல் ஆக்ரா மற்றும் அருகிலுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்துகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது, அதே நேரத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளனர்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாஜ்மஹாலின் நுழை வாயிலிலிருந்து தான நடனமாடும் ஒரு வீடியோ ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் படக்குழு மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த குழுதிட்ட மிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன் பிறகு தனுஷ் கார்த்திக் நரேனுடன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். நடிகர் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடிக்கிறார். இது தவிர மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.

You'r reading ஹாலிவுட் போகும் தமிழ் ஹீரோ தாஜ்மகாலில் முகாம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை