சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை கறுப்பு வெள்ளை படத்தில் நடித்தபோதே பெற்றுவிட்டார். அவர் நடித்த பைரவி படத்தில்தான் அவருக்கு பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எஸ்.தாணு சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்து பைரவி படத்தின் போஸ்டர்களை வெளியிட்டார். அந்த பட்டம் அப்படியே நிலைத்துவிட்டது. அதன்பிறகு எவ்வளவோ படங்களில் ரஜினிகாந்த் நடித்த போதும் 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் தான் அவரை தற்போது அரசியலுக்கு இழுத்து வந்திருக்கிறது. அந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ரஜினியின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமைச்சர்கள் பலர் ரஜினியை கடுமையாக தாக்கி பேசினார்கள். இந்த மோதல் படிப்படியாக வளர்ந்து அரசியலில் ரஜினி காந்த் ஜெயலிதாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். பாட்ஷா படம் இப்போதும் பரபரப்பாக பேசப்படும் படம். அதில் ரஜினி மும்பை டான் ஆகவும் ஆட்டோ டிரைவராகவும் வேடமேற்று நடித்தார். ரஜினி அரசியல் கட்சி தொடங்கும்போது அவருக்கு ஆட்டோ சின்னம் கிடைக்கும் என்று நெட்டில் தகவல்கள் பரவி வருகின்றன. பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நக்மா. தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். நக்மா ரஜினியை லண்டனில் சந்தித்த ஒரு பழைய புகைப்படத்தை பத்திரமாக பொத்தி வைத்து பாதுகாத்து வந்தார்.
அந்த படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில் லண்டனில் ரஜினிகாந்த்யை சந்தித்தபோது எடுத்த படம். நட்பு ரீதியாக இதை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவருடன் பாட்ஷா படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். என்றென்றும் என் நினைவில் நிற்கும் படம் எனக் குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா, மற்றும் நக்மா இடம்பெற்றுள்ளனர். இத்தனை வருடம் இந்த படம் பற்றி எந்த விஷமும் பகிராமலிருந்தார் நக்மா. தற்போது ரஜினி அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த நிலையில் இப்படத்தை பகிர்ந்திருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒருவேளை ரஜினி கட்சியில் நக்மா சேர எண்ணி உள்ளாரா என்ற கேள்வியும் எழுத்துள்ளது.