படக் குழுவுக்கு கோல்ட் காயின் பரிசளித்து திணறவைத்த ஹீரோ.. சந்தோஷத்தில் மூழ்கிய டீம்..

தமிழில் நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஷால், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் சொந்த பட நிறுவங்களில் படங்கள் தயாரிக்கின்றனர். மலையாள நடிகர்கள் பிருத்வி ராஜ், துல்கர் சல்மான் போன்றவர்களும் சொந்த நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கின்றனர். திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்திருக்கிறார் துல்கர் சல்மான். ஒரு தயாரிப்பாளராக தனது வேபரெர் பிலிம்ஸ் (Wayfarer Films) நிறுவனம் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் குவித்த படங்களை தயாரித்துள்ளார். தற்போது தனது நிறுவனம் மூலம் புரடக்‌ஷன் நம்பர் 4 படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படத்தில் ஷைனி டாம் சாக்கோ, துருவன், அஹானா கிருஷ்ணா உட்பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

துல்கர் சல்மானின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு மற்றும் முழு ஆதரவில், படக்குழுவின் உதவியில் இப்படத்தின் படப்பிடிப்பு 50 நாளில் முடிக்கப்பட்டது. அதிலும் கோவிட் பொதுமுடக்க சிக்கல்கள் நிறைந்த நிலையில் இத்தனை விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கியது அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆச்சர்யத்தியில் ஆழந்த நடிகர் ஷைனி டாம் சாக்கோ உடனடியாக நடிகர் துல்கர் சல்மான் மற்றும் அவரது மனைவி அமல் ஷுஃபியா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் துலகர் சல்மான் கோல்ட் காயின் பரிசளித்தார். தமிழில் நடிகர் விஜய் இதுபோல் படக் குழுவினருக்கு கோல்ட் காயின் பரிசளித்திருக்கிறார்.

அதேபோல் நடிகர் அஜீத் குமார் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்த தன் கையால் பிரியாணி செய்து பரிமாறுவது வழக்கம். இந்த பாணி துல்கர் மூலமாக மலையாள படத்துக்கும் பரவி இருக்கிறது. அவர் விஜய் பாணியில் கோல்ட் காயின் பரிசளித்து அசத்தி இருக்கிறார். “புரடக்‌ஷன் நம்பர் 4படத்தை பிரசோப் விஜயன் இயக்க, ரதீஷ் ரவி எழுத்து பணிகளை செய்துள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபாயிஷ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டெஃபி சேவியர் உடை வடிவமைப்பு செய்துள்ளார். சுபாஷ் காருன் கலை இயக்கம் செய்ய, ரஞ்சித் R மேக்கப் பணிகள் செய்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அலுவா பகுதியின் கண் கவர் பகுதிகளில், கோவிட்- 19 வழிகாட்டு விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு 50 நாளில் படமாக்கப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :