Friday, Apr 23, 2021

ஆக்‌ஷன் காட்சியில் ஜாக்கி ஆற்றில் மூழ்கிய படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Chandru Dec 23, 2020, 13:09 PM IST

ஹாலிவுட் படங்கள் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் வெளிவந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி இருக்கிறது. ஜப்பான், சீனா குங்ஃபூ பட நடிகர்களும் நம்மூர் சென்னை செந்தமிழை வஞ்சமில்லாமல் பேசி அசர வைக்கும் வகையில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. விரைவில் சர்வதேச ஸ்டார் ஜாக்கி சான் நடித்துள்ள படம் ”வேன்கார்ட் " இந்திய துணை கண்டம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஜாக்கியின் அதிரடி சண்டை காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத படம். ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந் திரன் மற்றும் இண்டோ ஓவர் சீஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.ஆக்‌ஷன் களத்தில் மீண்டும் 'அதிரடி மன்னன்' ஜாக்கி சான் களமிறங்கி இருக்கும் ”வேன்கார்ட்” டிச.25-ல் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இத்திரைப்படத்தில், ஜாக்கி சான் படங்களுக்கே உரித்தான அத்தனை அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக தெவிட்டாத ஆக்‌ஷன் காட்சிகள். கூடவே, ஜாக்கி சான் பாணி நகைச்சுவையும் பின்னிப் பிணைந்திருக்கும். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் குழந்தைப்பருவத்தில் தொலைக்காட்சிகளில் 'அதிரடித் திருவிழா' படத்தைப் பார்த்து ரசித்த நினைவுகளைத் தட்டி எழுப்பும். இந்த கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் வெள்ளித்திரையில் ஜாக்கி சானை காணலாம். வேன்கார்டு திரைப்படம் முழுநீள ஆக்‌ஷன் பொழுது போக்கு திரைப்படம். உலகம் முழுவதும் இருக்கும் மிகப் பெரிய தொழில்துறை ஜாம்பவான்களை கூலிப்படைகளிட மிருந்து காக்கும் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்துகிறார் ஜாக்கிசான். வேன்கார்டு என்ற அந்த நிறுவனத்தின் அதிரடி ஆக்‌ஷன் நடவடிக்கைகளும், முக்கியப் பிரமுகர்கள் மீட்புப் பணியும்தான் படத்தின் கதை.

அதிரடிக்குப் பஞ்சமில்லாத இத்தகைய கதைக்களத்தில் ஜாக்கிசான், 66 வயதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிகத் துல்லியமாக தெறிக்கவிட்டிருக்கிறார். ஜாக்கியின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டியிருக்கும் என்று படக்குழு சவால் விடுகிறது படக்குழு. ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுப்பதற்கு ஜாக்கி சான் எப்போதும் அஞ்சியதில்லை. அப்படித்தான் வேன்கார்டு படப்பிடிப்பின்போது ஹீரோயினை காப்பாற்றும் காட்சியில் மோட்டர் படகில் அவரை தோளில் தங்கியபடி வேகமாக செல்லும்போது ஆற்று வெள்ளம் அதிகாமாகி படகு ஒரு கவிழ்ந்தது. அதைகண்டு படக்குழு அதிர்ந்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஜாக்கியையும் ஹீரோயினைய்ம் தேடினார். ஹீரோயின் உடனடியாக மீட்கப்பட்டார். சுமார் அரை மணி நெரம் தேடியும் ஜாக்கி கிடைக்கவில்ல. இதனால் இயக்குனர் உள்ளிட்ட படக்குழு அச்சம் அடைந்தது. இயக்குனர் கதறி அழுதேவிட்டார். ஒருவழியாக அவர் ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து பத்திரமாக மிட்கப்பட்டர்.

இந்த சம்பவம் படத்தில் ஆக்‌ஷன் படத்தின் அதிரடிக்கு சாட்சியாகச் அமைந்துவிட்டது. நொடிக்கு நொடி அதிரடி என உருவாக்கப்பட்டுள்ள வேன் கார்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் 5 வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டது. அதிரடியை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாகப் பெரிய விருந்து தான், என அடித்துச் சொல்கிறது படக்குழு. இத்திரைப்படத்தில் ஜாக்கியை ஒரு புதிய பரிமாணத்தில் நீங்கள் காணலாம். ஆம், அதிரடி மன்னன் இப்படத்தில் ஒரு பாடகராக மிளிர்கிறார். ஆம்பிஷன் இஸ் மை ஹார்ட் ('Ambition in my heart ') என்ற ஆல்பத்தைப் பாடியிருக்கிறார். இப்படத்தை ஸ்டேன்லி டோங் இயக்கியுள்ளார். ஜாக்கி - ஸ்டேன்லி கூட்டணியில் இது 9-வது திரைப்படம். இவர்கள் கூட்டணியில் உருவான குங்ஃபூ யோகா (2017) வசூல் வேட்டை நடத்தியது. இந்த இணை போலீஸ் ஸ்டோரி 3: சூப்பர் காப் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்த கூட்டணி என்பது கூடுதல் தகவல்.

You'r reading ஆக்‌ஷன் காட்சியில் ஜாக்கி ஆற்றில் மூழ்கிய படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை