பரியேறும் பெருமாள் ஜோடி மீண்டும் இணைகிறது.. கைகோர்க்கும் கைதி நடிகர்..

by Chandru, Dec 23, 2020, 13:25 PM IST

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி. மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு ஆனந்தி இரண்டாம் உலகபோரின் கடசி குண்டு படத்தில் நடித்தார். தற்போது டைட்டானிக் காதலும் கவுந்துபோகும் எங்கே அந்த வான் உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக ஜோம்பி ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார். அதேபோல் ஜடா, சர்பத் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கதிர். பரியேறும் பெருமாள் ஜோடி கதிர் - ஆனந்தி இணையும் புதிய படத்தில் “கைதி” படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் ஈர்த்த நடிகர் நரேன் இப்படத்தில் மீண்டும் ஒரு மிக முக்கியமான திருப்பு முனை பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏஏஏஆர் புரடக்‌ஷன் (AAAR Productions) தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போதைக்கு ப்ரடக்‌ஷன் நம்பர் 1 (Production No 1) தலைப்பிடப்பட்டுள்ளது. திரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். இப்படத்தினை ஏஏஏஆர் புரடக்‌ஷன் சார்பில் லவன் பிரகாசன் மற்றும் குசன் பிரகாசன் இணைந்து தயாரிக்கிறார்கள். படம் பற்றி அவர்கள் கூறியதாவது: தமிழ் திரை உலகில் இது எங்களின் முதல் திரைப்படம்.தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களளை தயாரிப்போம். குறிப்பாக புத்தம் புது ஐடியாக்களுடன் போராடும் புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.

இயக்குநர் ஸாக் ஹாரிஸ் லண்டனில் மிக உயர்ந்த கல்லூரியில், திரைப்பட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு திறன் மிகு கலைஞர்களுடன் வேலை செய்துள்ளார். இத்திரைப்படத்தை மிக தரமான படைப்பாக உருவாக்குவார் எனும் நம்பிக்கை உள்ளது. தமிழ் சினிமாவில் தனித் திறமையால் பாராட்டு பெற்றிருக்கும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஆகியோர் எங்கள் படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. ஏற்கனவே அவர்கள் தமிழ் சினிமாவில், மிக தரமான படங்களில், வலுவான கதாப்பாத்திரங்களில் நடித்து, பெரிய அளவில் பாராட்டு பெற்றுள்ளார்கள்.

மேலும் அனைவராலும் கொண்டாடப்பட்ட “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி இருவரின் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது. நடிகர் கதிர் இப்படத்திற்கு பிறகு மிகப் பெரும் உயரத்திற்கு செல்வார். தமிழின் பிரபல கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன், இப்படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள், அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும். 2021 வருட தொடக்கத்தில் படத்தை துவக்கி, 2021 கோடை காலத்தில் படத்தை வெளியிட திட்ட மிட்டுள்ளோம். இப்படம் சென்னை மற்றும் கேரள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை