எம் ஜி ஆர் நினைவு நாளில் எம் ஜி ஆர் கெட்டப் போட்ட ஹீரோ..

by Chandru, Dec 24, 2020, 14:01 PM IST

புரட்சி தலைவர்,பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று. அவரது நினைவாக ரசிகர்கள் தொண்டர்கள் ஆங்காங்கே எம்ஜிஆர் உருவபடங்கள் அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நாளில் எம்ஜிஆர் வேடம் அணிந்த நடிகர் அரவிந்தசாமி அச்ச அசலாக எம்ஜிஆர் போல் தோன்றும் புகைபடங்களை தலைவி படக்குழு வெளியிட்டுள்ளது. தலைவி படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக அவர் ஜெயலலிதா நடித்த பழைய படங்களை பார்த்து அவரது மேனிரிசம் பற்றி கவனித்து அதை படத்தில் பயன்படுத்தினார்.

பரத நாட்டியம் கற்றுக் கொண்டதுடன் உடல் வெயிட் போட்டும் நடித்தார். ஜெயலலிதா தனது சினிமா, அரசியல் வழிகாட்டியாக குருவாக எம்ஜிஆரைத்தான் சொல்வார். தலைவி படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய முக்கிய காட்சிகள் இடம் பெறுகிறது. இதில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்தது சில நடிகர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். எம்ஜிஆர் போல் அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது பொருத்தமாக இருந்தது. அவரது கெட்டப் இதுவரை வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர் நினைவு நாளான இன்று அந்த படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்துணவு திட்டம் அறிமுகத்தின்போது குழந்தைகள் அருகில் அமர்ந்து எம்ஜிஆர் உணவு உண்பது, மக்களை கண்டு வணக்கம் தெரிவிப்பது போன்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை நெட்டில் வைரலாகி வருகின்றன. தலைவி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த கங்கனா ரனாவத், வரலாற்று சிறப்பு மிக்க தலைவி படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக ஜெயலலிதா வாழ்க்கை படத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது இறுதியாக தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏ.எல்.விஜய் படத்தை இயக்கி உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை