Saturday, Apr 17, 2021

அதா சர்மா அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்..

by Chandru Dec 25, 2020, 10:29 AM IST

தமிழில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபு தேவா ஜோடியாக நடித்தவர். சிம்பு - நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மிக உயரமான நடிகை என்று இவரைச் சொல்வார்கள். கிளாமர் ஹீரோயினாக நடித்தாலும் எதிர்பார்த்தளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அதா சர்மாவிடம் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்ற கேட்டது தான் தாமதம் அவர் வெஜிடேரியன் உணவு பற்றி பேசத் தொடங்கிவிட்டார்.

அவர் கூறியதாவது:நான் சைவ உணவு உண்ணும் குடும்பத்தில் பிறந்ததால் தூய சைவ உணவு உண்பவளாக இருக்கிறேன். அசைவ உணவை ஒருபோதும் சாப்பிட்டதில்லை. சமீபத்தில் பீட்டா அமைப்பு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரியாணி செய்வதற்காக இரு இடத்தில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மீட்டு அவற்றுக்கு சோளம் போன்றவற்றைக் கொடுத்தனர். இதை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் இது எனது நெஞ்சில் ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தியது. வெளியில் செல்லும்போது லாரிகள் அல்லது டெம்போக்களில் அடைத்துவைத்து ஏற்றிச் செல்லப்படும் கோழிகளை நாம் அடிக்கடி பார்க்கி றோம். அதுபோல் மனிதர்களை அடைத்து கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

எனது அழகான சருமம், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் ஆக்கப்பூர்வமான மனதின் ரகசியம் என்ன என்று நிறையப் பேர் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். இது ஒரு சைவ உணவு உண்பதால் கிடைத்தது என்று நான் நினைக்கிறேன். ஆரோக்கியமான உணவை நீங்கள் சாப்பிட்டால், நீங்கள் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும், நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கை காலம் இன்னும் அதிகமாக நீடிக்கும். எனவே சைவமாக மாறி உலகை ஆரோக்கியமான இடமாக மாற்ற மக்களால் முடியும் என்று நம்புகிறேன். ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற விரும்பினால், அசைவ உணவை நீங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நான் மிகவும் ஆற்றல் மிக்கவளாக இருக்கிறேன். தூய சைவ உணவால் இது எனக்குக் கிடைத்தது. நான் நினைக்கிறேன் உங்களாலும் உங்கள் வாழ்க்கையை இது போல் மாற்ற முடியும்.

இவ்வாறு கூறிய அதா சர்மா வெப் சீரிஸில் திருநங்கை வேடம் ஏற்று நடித்திருந்தது பற்றித் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, நான் பதி பத்னி அவுர் பங்காவில் திருநங்கை வேடம் நடிக்க முடிவு செய்தபோது, ​​ எனக்கு ஒரு திருநங்கையாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணவில்லை. அவர்களின் சிந்தனையில் உள்ள தனித்துவத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ஒருவரின் தோற்றம் அல்லது செயல்பாடு வித்தியாசமாக இருந்தால் அது விமர்சனத்தைப் பெறுகிறது. அதுவொரு கடினமான நேரமாக அவர்களுக்கு அமைகிறது. நான் திருநங்கை கதாபாத்திரத்தை வித்தியாசமாக கருதவில்லை. அவர்களை சமமாக கருதுகிறேன். நான் நடித்ததைப் பார்த்து ஒரு ரசிகர் என்னைத் திருநங்கை எனக் குறிப்பிட்டார். அப்போது நான் ஏற்ற வேடத்தை வாய்ப்பை நியாயப்படுத்தியுள்ளேன் என்று எண்ணினேன் எனக் கூறினார் அதா சர்மா.

You'r reading அதா சர்மா அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை