நடிகையை விரைவில் மணப்பேன்: நடிகர் உறுதி..

by Chandru, Dec 25, 2020, 10:38 AM IST

கோலிவுட் முதல் பாலிவுட் வரை நட்சத்திரங்களின் திருமணம் நடக்கிறது. பெரும் பாலும் காதல் திருமணங்களாக இருக்கின்றன. தமிழில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். கடந்த 8 மாதமாக இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். திருமணம் பற்றி அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. அதேபோல் நடிகை நிக்கி கல்ராணி, ஆதி இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர்.இந்தி நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியாபட் காதல் தற்போது டிரெண்டிங் ஆகி இருக்கிறது.

முன்னதாக ரன்பீர் கபூர் இந்தி நடிகை கேத்ரினா கயீப்பை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் காதல் பிரேக் அப் ஆனது. இதையடுத்து நடிகை அலியாபட்டுடன் ரன்பீருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். விரைவில் அலியா பட்டை திருமணம் செய்வேன் என்று ரன்பீர் கூறி உள்ளார்.
மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, லாக்டவுன் இல்லாமலிருந்திருந்தால் அலியா பட்டுடன் எனது திருமணம் எப்போதோ முடிந்திருக்கும்.

இதுபற்றி வார்த்தை ஜாலம் செய்ய விரும்பவில்லை. விரைவில் எங்கள் திருமணம் நடக்கும். லாக்டவுனில் அலியாபட்டுடன் தங்கி இருந்தபோது அவர் எவ்வளவு பெரிய சாதனையாளர் என்பது தெரிந்தது. கிதார் இசைப்பது முதல் திரைக்கதை எழுதுவது வரை அவருக்கு தெரியும் அவரது சாதனையுடன் ஒப்பிட்டால் அவருக்கு கீழ் தான் நானிருக்கிறேன் என்றார்.அலியா பட் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிக்கிறார். கடந்த மாதம் அலியாபட் இப்படத்தின் படப்பிடிப்பிற் காக ஐதராபாத் வந்தார். அவர் நடித்த காட்சிகள் படமாக்கப் பட்டன. மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஜனவரி மாதம் வரவுள்ளார்.

டிசம்பர் 4ம் தேதியே ரன்பீர் கபூர், அலியாபட் திருமணம் நடக்கும் என்று முன்பு தகவல் வெளியானது. அதன்பிறகு அதுபற்றி இருவரும் பேசாமலிருந்தனர். தற்போது ரன்பீர் கபூர் அலியாவை விரைவில் மணப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை