இளையாராஜா இசை பாடகி மறுமணம் தேதி உறுதி..

Advertisement

நடிகர், நடிகைகள் மறுமணங்கள் பல முறை நடந்திருக்கிறது. பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்ற சில முக்கிய நடசத்திரங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களிடம் விவகாரத்து பெற்று பிறகு மறுமணம் செய்துக்கொண்டனர். இளையராஜா இசையில் புண்ணியவதி படத்தில் உனக்கொருத்தி.. என்ற பாடல் பாடியதுடன் காதல் ரோஜாவே படத்தில் இளையாஜா இசையில் நினைத்த வரம் என்ற பாடலையும், பத்ரி படத்தில் ரமணா கோகுலா இசையில் காதல் சொல்வது என்ற பாடலும் பாடியவர் சுனிதா. தெலுங்கு படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பதுடன் கன்னட படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இவர் கிரண் குமார் என்பவரை தனது 10வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆகாஷ் மற்றும் ஸ்ரேயா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரேயா தற்போது சினிமா பாடகியாகி இருக்கிறார்.

கிரண்-சுனிதா சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது சுனிதாவுக்கு 42 வயது ஆகிறது. இந்நிலையில் சுனிதாவுக்கும், மீடியா சி இ ஓ அதிகாரி ராம் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. அவரும் விவாகரத்து பெற்றவர். ஆனால் குழந்தைகள் யாரும் இல்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். குடும்பத்தினர் இதற்கு சம்மதித்தனர். சுனிதாவின் மகன், மகளும் அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுனிதா-ராம் திருமண நிச்சயார்த்தம் நடந்தது. டிசம்பரில் எளிமையாக மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. ராம் தயார் இந்த திருமணதை பெரிதாகவே நடத்துங்கள், நண்பர்கள், உறவினர்களை திருமணத்து அழையுங்கள் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும் திருமணத்துக்கு பிறகு இருவரும் புதிய வீட்டில் வாழ முடிவு செய்துள்ளனர். தற்போது வீடு கட்டி வருவதால் அது கட்டி முடித்து தயார் ஆன பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தார்களாம். எனவே இந்த மாதம் நடக்கவிருந்த இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடக்க முடிவானது. தற்போது ஜனவர் 9ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக உறுதி ஆகி உள்ளது. திருமணத்துக்கு பிறகு சுனிதா தொடர்ந்து படங்களில் பாடல்கள் பாட முடிவு செய்திருக்கிறார். அத்துடன் டிவி ஷோக்களில் பங்கேற்கவும் எண்ணி இருக்கிறார். 2வது திருமணம் செய்யும் சுனிதா கூறும்போது, எனது பிள்ளைகள் அருமையானவர்கள். அவர்களை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ராமை நான் சந்தித்தேன். அவர் எனக்கு உற்ற துணையாக இருக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் சுனிதா.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>