நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் எனிமி. ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் ஆர்யா மனைவி நடிகை சாயிஷா எனிமி படக்குழுவுக்கு சீஸ்கேக் செய்து அனுப்பி வைத்தார். படக்குழுவில் அனைவரும் ரசித்து சாப்பிட்டனர். இதுகுறித்து பட இயக்குனர் ஆனந்த சங்கர் தனது இணையதள பக்கத்தில், மிகவும் பிரமாதமாக வீட்டில் செய்த சீஸ்கேக்கை சாயிஷா தயாரித்து அனுப்பி இருந்தார். நகரில் இது மிகச் சிறந்த கேக்காக இருந்தது என்று தெரிவித்திருந்தார். சாயிஷா கேக் செய்வதில் கைதேர்ந்தவர். கொரோனா லாக்டவுனில் அவர் சாக்லெட் கேக், கிரீம் கேரமெல் கேக், கப்கேக், மாங்கே கேக் என விதவிதமான கேக் வகைகளை செய்து ஆர்யாவுக்கு அளித்தார். எனிமி படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தபோது திடீரென்று இயக்குனர் ஆனந்த் சங்கர் மனைவி படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்.
அவரை கண்டு இயக்குனர் ஆச்சர்யம் அடைந்தார். படப்பிடிப்புக்கு கேப் விட்டு அவருடன் பேசினார். இதுபற்றி மெசேஜ் பகிர்ந்த இயக்குனர், உங்களுடைய வேலை லைட்ஸ் கேமரா ஆக்ஷன், ஆனால் மனைவி சர்ப்ரைஸாக அரங்கிற்குள் வரும்போது பார்வையை அவர் மீது திருப்பி அவருக்கு குடை பிடிப்பதுதான் சரி என்று ஜாலியாக குறிப்பிட்டிருந்தார்.. ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இணைந்து நடித்தனர். விஷாலுக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வராத நிலையில் ஆர்யா அவரை பாலாவிடம் அழைத்துச் சென்றார். அவன் இவன் படத்தில் திருநங்கை பாணியிலான கதாபாத்திரத்தில் ஒன்றரை கண்ணில் பார்த்தபடி நடிக்கும் பாத்திரம் விஷாலுக்கு தந்தார்.
அதை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஷால், அதன்பிறகு ஆர்யா, விஷால் இணைந்து ஒரு முழு படத்தில் நடிக்கவில்லை. கெஸ்ட் ரோல்களில் இருவரும் மாறி நடித்துள்ளார். இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு எனிமி படத்தில் கிடைத்திருக்கிறது. நெருங்கிய நண்பர்களான இருவரும் படத்தில் பரம எதிரிகளாக நடிக்கின்றனர். இது தவிர ஆர்யா, கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்கிறார். பாக்ஸிங் வீரராக நடிக்கும் ஆர்யா இப்படத்துக்காக பயிற்சி பெற்றதுடன் உடம்பையும் பாக்ஸ்ர்போல் கட்டுமஸ்தாக உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். நடிகர் விஷால் சக்ரா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.