அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் கோபம்.. குட்டி தல படத்தை கண்டதும் மகிழ்ச்சி..

by Chandru, Dec 27, 2020, 10:58 AM IST

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத் குமார். கொரோனா ஊரடங்கிற்கு முன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு தளர்வில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் வலிமை படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் அஜீத் ஸ்டண்ட் வீரர்களுடன் மோதி பைக் ஒட்டியபடி மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்ததில் அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு சிறுது நேரம் நிறுத்தப்பட்டது. சிகிச்சை எடுத்துக்கொண்ட அஜீத் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு காட்சியை முடித்துக்கொடுத்தார். மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

எச்.வினோத் இப்படத்ட்தை இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மாஸ்டர், ஜெகமே தந்திரம், பூமி, ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களின் அப்டேட் நிறைய வந்திருக்கும் நிலையில் வலிமை படத்தின் அப்டேட் மட்டும் வெளியிடாதது ஏன்? அதை வெளியிடாத நபரை நீக்குங்கள் என்று கோபமாக நெட்டில் மெசேஜ் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் பெயரிலான போலி இணையதள கணக்கில், அஜீத்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஜனவரி 1ம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது இயக்குனர் எச்.வினோத் பெயரிலான போலியான வலைதள பக்கம் என்று கூறப்படுகிறது. வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி நடக்க உள்ளது. படம் ஏப்ரல் மாதம் வெளியிட எண்ணியிருப்பதால் படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட்லுக் வெளிவருவதில் தாமதம் ஏற்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது. அஜீத், ஷாலினிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ஆத்விக் தனது தாய் ஷாலினியுடன் இருக்கும் புதிய படமொன்று நெட்டில் வலம் வருகிறது. வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் அஜீத் மகன் படத்தை கண்டதும் கோபத்தை மறந்து குட்டி தல என மெசேஜ் பகிர்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை