முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு.. அரசியல் விவகாரமா?

by Chandru, Dec 28, 2020, 13:36 PM IST

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று நேரில் சந்த்தித்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் விஜய் முதல்வரை சந்தித்தது ஏன் என்று பலவாறு பேசப்படுகிறது. ஆனால் விஷயம் சினிமா சம்பந்தபட்டது என்கிறார்கள். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வில் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் படத்தை தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அப்போதும் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. கோடிகளில் செலவு செய்து எடுத்த படம் 50 சதவீத டிக்கெட் அனுமதி என்பதால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்வது என்று பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. சமீபத்தில் பேட்டி அளித்த செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாஸ்டர் படத்துக்கு சிறப்பு காட்சிகள் நடத்த கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கப்படும், தியேட்டர் களுக்கு 100 சதவித அனுமதிக்கும் கோரிக்கை வைத்தால் ஆலோசித்து நல்ல முடிவு சொல்லப்படும் என்றார். இது தொடர்பாக விஜய் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 100 சதவீத டிக்கெட் அனுமதி மற்றும் சிறப்புகாட்சிகளுக்கு விஜய் முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொங்கலையொட்டி சிறப்பு காட்சிகள் மற்றும் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு அரசு உத்தரவிட வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன் விஜய்யின் எஸ்.ஏ.சந்திர சேகரன் விஜய் பெயரில் கட்சி தொடங்க தேர்தல் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்தார். அதற்கு விஜய்யே எதிர்ப்பு தெரிவித்தார். இதை யடுத்து கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தேர்தல் தலைமை அலுவலகத்துக்கு கடிதம் எழுதினார். விரைவில் அதாவது வரும் 31ம் தேதி ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்க உள்ளார். இந்நிலையில் முதல்வரை விஜய் சந்தித்ததற்கு சிலர் அரசியல் முடிச்சி போட்டு பேசி வருகின்றனர்.

You'r reading முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு.. அரசியல் விவகாரமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை