இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பு.. பிரசாத் ஸ்டுடியோவில் பரபரப்பு..

by Chandru, Dec 28, 2020, 13:27 PM IST

இசைஞானி இளையராஜா. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். காதுக்கினிய, மனதுக்கினிய பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்து தான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார். 80களின் பாடல்கள் என்றால் இளையராஜா என்ற முத்திரை பதிந்துவிட்டது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாளே கிடையாது. 80 காலகட்ட படங்கள் இப்போது உருவாக்கப்பட்டாலும் இளையராஜா பாடலை பின்னணியில் சுழல்விட்டுத் தான் படமாக்குகின்றனர். கடந்த சில வருடங்களாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் நிலவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை ஒலிப்பதிவு செய்த இசை கூடத்திலிருந்து இளையராஜாவை ஸ்டுடியோ நிர்வாகம் வெளியேறச் சொல்லி இருக்கிறது. கடந்த ஆண்டு இதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி போன்ற பிரபல இயக்குனர்கள் பிரசாத் ஸ்டுடியோ முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் சமாதான பேச்சு வார்த்தை எடுபடவில்லை. இளையராஜா இசை அமைத்து வந்த ஒலிப்பதிவு கூடத்தை நிர்வாகம் பூட்டிவிட்டது. அதை எதிர்த்து இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், என்னுடைய உடைமைகள் இசைக் கூடத்தில் உள்ளன. அதை எடுக்க ஸ்டியோவிற்குள் என்னை அனுமதிக்க உத்தர விட வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கு ஸ்டுடியோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துருக்கிறது. அவர்கள் தரப்பில் கூறும்போது, இசை கம்போஸ் செய்யும் எண்ணத்துடன் இளையராஜாவை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்க முடியாது என்று பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஸ்டுடியோ தரப்பு வெளியிட்டுள்ள மெசேஜில், இளையராஜா தொடர்ந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் எங்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. தனது உடைமைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டிருக்கிறார். ஆனால் அங்கிருப்பவை ஏற்கனவே பழுத்தாகிவிட்டது.

அவருடைய உடைமைகள் நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டது. அந்த கட்டிடத்தை நிர்வாகம் இடிக்க தீர்மானித்துள்ளது. இசை கம்போஸ் செய்யும் எண்ணத்துடன் இளையராஜாவை ஸ்டியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ மோதல் முடிவை நெருங்கியது. பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனது உடமைகளை சேகரிக்க உதவுமாறு கோரி இளையராஜா சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இசையமைக்கும் நோக்கத்துடன் வந்தால் இளையராஜாவை ஸ்டுடியோ அனுமதிக்காது என்று ஸ்டுடியோ நிர்வாகம் வழக்கு பதிவு செய்தது. பிரசாத் ஸ்டுடியோஸ் பின்னர் இசையமைப்பாளரை நிபந்தனைகளுடன் அனுமதிப்பதாக கூறப்பட்டது. தற்போது இளையராஜா தனது உடமைகளை சேகரித்து ரெக்கார்டிங் தியேட்டரை ஸ்டுடியோவில் விட்டு வெளியேற ஒப்புக் கொண்டார்.

இசையமைப்பாளர் தனது உடமைகளை சேகரித்த பின்னர் ஸ்டுடியோவை விட்டு வெளியேறுவார் என்று இளையராஜாவின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. அந்த அறிக்கையில், நான் பிரசாத் ஸ்டுடியோவில் எனது இடத்தை கோர மாட்டேன். நான் எனது உடமைகளை எடுத்துக்கொள்வேன் என்றார். பிரசாத் ஸ்டுடியோஸ் இளையராஜாவை நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதிப்பதாக கூறபட்டது. இசை அமைப்பாளர் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், எதிர்காலத்தில் அவர்களின் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தெரிவித்திருந்தனர். இளையராஜா முன்னதாக தனது பொருட்களை சேதம் செய்ததற்காக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் 50 லட்சம் தரவேண்டும், என்னை மன உளைச்சல் ஏற்படுத்தியதாக நஷ்டஈடு தர வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் கோர்ட் இளையராஜவுக்கு பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல ஒரு நாள் அனுமதி வழங்கி உள்ளது. காலை 9 மணிமுதல் 4 மணிவரை இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து இன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வருவதாக தகவல் பரவியது. அங்கு டிவி கேமாரா மேன்கள், மீடியாக்கள் காலையிலேயே குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. ஆனால் அங்கு வந்த இளையராஜா பி ஆர் ஓ வந்து, இளையராஜா இன்றைக்கு வரவில்லை என்று தகவல் தெரிவித்தார். இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் வந்தனர். அவர்களுடன் இளையராஜா உதவியாளர்கள் வந்தனர். அவர்கள் உள்ளே சென்று விட்டு திரும்பிய போது இளையராஜா பூட்டி வைத்திருந்த ரெக்கார்டிங் தியேட்டர் அறை பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது என்றனர். இது இளையராஜாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

You'r reading இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பு.. பிரசாத் ஸ்டுடியோவில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை