இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத் துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார். தாயார் கரீனா பேகம். (இவரது நிஜ பெயர் கஸ்தூரி சேகர்)
ஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிராத்தனை செய்ததன்விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆர்வம் காட்டியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாயார் தான்.
ரஹ்மானை கண்ணும் கருத்துமாக வளர்தார். கரீனா பேகம் இன்று காலமானார். தாயார் மரணம் அடைந்த தகவல் அறிந்தது கண்ணீர் விட்டு அழுதார் ரஹ்மான். இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் உருக்கமான மெசேஜ் வெளியிட்டார். மேலும் அவர் ஒரு பேட்டியில் கூறியபோது,என் தாயார் இசையை மிகவும் நேசிப்பவர். ஆன்மிகரீதியாக என்னை விட என் தாயார் உயர்வானவர். அவர்தான் என்னை இசை துறையில் பயணிக்க வைத்தார். 9ம் வகுப்பிலேயே என்னை பள்ளியிலிருந்து விலக வைத்து இசையில் ஈடுபட செய்தார். நான் இசையில் ஈடுபட வேண்டும் என்பது அவரது எண்ணம். ரஹ்மான் தாயார் மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறும்போது.
என்றைக்கும் எங்கள் மகராணி அவர்தான் என கரீனா பேகம் படம் வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்கார் வென்று பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் திருமதி கரீமா பேகம் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இசை அமைப்பாளர்கள் தேவி ஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், இயக்குனர்கள் சேரன், அஜய் ஞானமுத்து, பாடகி ஸ்ரேயா கோஷல் எனட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.