பீட்சா 3ம் பாகம்: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு..

by Chandru, Jan 1, 2021, 17:39 PM IST

கடந்த 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகை திருப்பி போட்டு புதிய டிரெண்டுக்கு திருப்பி விட்ட படம் பீட்சா. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார். இவரது முதல் படமும் இது தான். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீஸன் நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஜிகர்தண்டா, இறவி, மெர்குரி போன்ற படங்களை இயக்கியவர் ஒரே பாய்ச்சலாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கினார். தற்போது தனுஷ் நடித்திருக்கும் ஜெக்மே தந்திரம் இயக்கி உள்ளார். அடுத்து விக்ரம் மற்றும் துருவ் இனைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

தற்போது பீட்சா 3 படம் உருவாகிறது. இதை மோகன் கோவிந்த் இயக்குகிறார். அஸ்வின் காகுமனு, குருவ் நாராயாணன். காளி வெங்கட் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, பீட்சா 3 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இயக்குனராக அறிமுகமாகும் கோகன் கோவிந்த் மற்றும் படகுழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார். குறிப்பிட்டுள்ளார். பீட்சா3 போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜுக்கு நடிகர் அஸ்வின் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோல் குருவ் நாராயணன் கூறும்போது, பிட்சா3 படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. சக்தி வாய்ந்த ஸ்கிரிப்ட். அசத்தலான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது அதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். முன்னதாக பீட்சா 2 படம் வில்லா என்ற பெயரில் உருவாகி வெளியானது. இப்படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்கி இருந்தார் ஆனால் நடிகர்கள் பீட்சா ஒன்னில் நடித்தவர் அல்லாமல் அசோக் செல்வன், சஞ்சிதா செட்டி ஜோடியாக நடித்திருந்தனர். பீட்சா 3யிலும் வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்