ரிலையன்ஸ் நிறுவன கணக்குகள் மோசடியானவை: 3 வங்கிகள் அறிவிப்பு

by Balaji, Jan 1, 2021, 17:37 PM IST

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது 3 வங்கிகள். கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய அனில் அம்பானியின் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து பல சிக்கல்களில் மாட்டி வருகிறது . தற்போது நாட்டின் 3 முக்கிய வங்கிகள் அனில் அம்பானியின் நிறுவன கணக்குகளைப் மோசடி கணக்குகள் என அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என 3 வங்கிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளன.

நாட்டின் உச்சத்திலிருந்த தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அனில் அம்பானிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இது அமைந்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவன கணக்குகளையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது. மும்பை நிறுவன சட்ட தீர்ப்பாயம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், அந்நிறுவனத்தின் தீர்வு காணும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பின்னரே வங்கிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்பராடெல், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவன கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது.

மும்பை நிறுவன சட்ட தீர்ப்பாயம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் தீர்வு காணும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்த நிறுவன சொத்துக்களை வாங்க விண்ணப்பம் அளித்துள்ளது. இதன் படி ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் டிஜிட்டல் பிளாட்பார்ம் என்ற நிறுவனம், ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் 43 ஆயிரம் டவர் மற்றும் 1. 72 லட்சம் கிலோ மீட்டர் பைபர் நெட்வொர்க் ஆகியவற்றை 4,400 கோடி ரூபாய்க்குக் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

You'r reading ரிலையன்ஸ் நிறுவன கணக்குகள் மோசடியானவை: 3 வங்கிகள் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை