தீபாவளிக்கு சிம்புவுடன் மீண்டும் இணையும் இயக்குனர்

Advertisement

சிம்புவை ஒப்பந்தம் செய்தால் படத்தை முடிக்க வருடக் கணக்காகிவிடும் என்று கோலிவுட்டில் பேசி வந்தவர்களின் வாயை அடைத்திருக்கிறது. ஈஸ்வரன் திரைப்படம். 28 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கிய சுசீந்திரன் மீண்டும் அவருடன் தீபாவளிக்கு மற்றொரு படத்தை உருவாக்க உள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் . படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசினர்.

இதில் பேசிய சுசீந்திரன் கூறியதாவது: இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது சிம்புவைப் பற்றி எங்களை விட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும். ஏனென்றால் எங்களை விட அதிகமாக நீங்கள் தான் அவரை அதிகமாகப் பின்தொடருகிறீர்கள்.ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. எப்போது பேசினாலும் ரசிகர்களைப் பற்றிப் பேசுகிறார். என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கூறுவார்.

இப்போது சொல்கிறேன் இன்னும் சில வருடங்களில் இரண்டு வருடத்தில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. ஷாருக்கான் அமீர்கான் போன்ற 5 நடிகர்களை பட்டியலிட்டால் அதில் சிம்புவும் இருப்பார், இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும். மீண்டும் ஒரு படத்தில் சிம்புவுடன் இணைகிறேன். தீபாவளிக்கு எங்களின் பட்டாசு வெடிக்கும் சிம்புவை வைத்து இயக்கப் போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால் சிம்பு, மற்றவர்கள் சொல்வதற்குக் காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதே போல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப் பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ஈஸ்வரன் படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்குத் தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப் பெரிய நன்றி. இப்படத்தில் சிம்பு நடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கே.வி.துரை. இவ்வாறு சுசீந்திரன் கூறினார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, சிம்பு இதே மாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள்” என்றார்.இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்த பிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்துப் பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றிச் சொன்னார்கள்.நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம் என்றார்.சண்டைப் பயிற்சியாளர் காசி தினேஷ் பேசும்போது, சிம்புவுடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதிலும் இறுதிக் கட்ட சண்டைக் காட்சிகளில் சிம்புவின் ஒத்துழைத்ததால் தான் நன்றாக வந்துள்ளது என்றார்.

வசனகர்த்தா பாலாஜி கேசவன் பேசும்போது,இயக்குநர் சுசீந்திரனுடன் தீபாவளி படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தைத் திரையில் காணும்போது அதன் பிரமாண்டத்தை உணர்ந்தேன். இந்த வாய்ப்பு கொடுத்த சுசீந்திரனுக்கு நன்றி என்றார்.நடிகர் பாலசரவணன் பேசும்போது,எனக்கு மிக மிக முக்கியமான படம் ஈஸ்வரன். அதற்கு இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. ஒரே நேரத்தில் 3 படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசக் கூடியவர் சிம்பு. அனைவரிடமும் ஒரே பேச்சு ஒரே முகம் தான். ஒரு நாள் படப்பிடிப்பில் அன்பைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கொடுத்ததால் தான் இன்று அவருக்குக் கிடைத்திருக்கிறது என்றார்.

நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,திரைத்துறைக்கு வரும்போது அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எனக்கு இருந்தது. அது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார் என்றார்.

தயாரிப்பாளர் பாலாஜி கபா பேசும்போது,இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். அதிலும் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி கூற வேண்டும். மிகவும் நேர்மையானவர். அவர் கூறியது போல் 28 நாட்களிலேயே படத்தை முடித்துக் கொடுத்தார்.சிம்புவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவரை நான் இதுவரை மூன்று முறை தான் பார்த்திருக்கிறேன். அவர் என்ன பேசுவாரோ அப்படி தான் அவருடைய செயலும் இருக்கும். சிம்புவிற்கு நன்றி . எந்தச் சூழல் வந்தாலும் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வந்தே தீரும்என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>