நடிகை நிதி அகர்வாலை மாமா என்று கூப்பிட சொன்ன இயக்குனர்.. வீடியோவில் விளக்கம்..

by Chandru, Jan 4, 2021, 12:15 PM IST

நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று முந்தினம் சென்னையில் நடந்தது. பட ஹீரோயின் நிதி அகர்வால் பேசுவதற்காக மேடைக்கு வந்தார். அப்போது இயக்குனர் சுசீந்திரனும் அவருடன் மேடைக்கு வந்து அவர் பேசும்போது. மாமன்னு சொல்லு மாமான்னு சொல்லு என்று அவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் நிதி அகர்வால் தனது பேச்சை தொடர்ந்த வண்ணமிருந்தார். அவர் பாலிவுட் நடிகை. சுசீந்திரன் தமிழில் சொன்னது அவருக்கு சரியாக புரியவில்லை. எனக்கு மொழி பிரச்சனை இருக்கிறது என்றும் சொல்லிப் பார்த்தார்.

அப்போதும் சுசீந்திரன், நிதி அகர்வாலை விடாமல் மாமா என்று சொல் என மேடையில் நின்றபடி சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு இதுபற்றி சுசீந்திரன் கூறும்போது, ஈஸ்வரன் படத்தில் சிம்புவை நிதி அகர்வால் மாமா மாமா என்று அழைத்த படி அவரை துரத்தி துரத்தி காதலிப்பார். அந்த வசனத்தைத்தான் சொல்லச் சொன்னேன். நிதி அகர்வாலை நாங்கள் தான் தமிழுக்கு அறிமுகம் செய்கிறோம். அவர் நடித்த இன்னொரு படம் (பூமி) ஒடிடியில் தான் வெளியாகிறது. எங்களின் ஈஸ்வரன் தான் அவருக்கு தியேட்டரில் வெளியாகிறது என்றார். பிறகு மேடையில் நிதி அகர்வாலை ஒரு ஸ்பெஷல் நடனம் ஆடக் கேட்டார். உடனே அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி, இப்பொது சுசீந்திரன் சார் நடனம் ஆடுவார் என்று அவரை வம்பிழுத்தார்.

உடனே நாம் இருவரும் ஆடலாம் என்று தொகுப்பாளினியின் கையை பிடித்து ஆட வா என்றார் இயக்குனர். ஈஸ்வரன் பட விழாவில் இது ருசிகர சம்பவமாக அமைந்தது. பின்னர் சுசீந்திரன் நிதி அகர்வால் சம்பவம் குறித்து வீடியோவில் அவர் அருகில் அமர்ந்து விளக்கம் அளித்தார். அதில், தான் செய்ததை சிலர் தவறாக கருதிவிட்டனர். அதனால் தான் விளக்கம் அளித்தேன் என்றார். ஈஸ்வரன் படத்திலிருந்து 3 பாடல்கள் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டன. ரசிகர் தியேட்டர் பால்கனியில் நின்றபடி எஸ் டி ஆர் என்று கோஷம் போட்ட வண்ணம் இருந்தனர். முன்னதாக சிம்புவை வரவேற்க கொட்டி மேளம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் மேடையில் நடனம் ஆடி சிம்புவை வரவேற்றனர்.

You'r reading நடிகை நிதி அகர்வாலை மாமா என்று கூப்பிட சொன்ன இயக்குனர்.. வீடியோவில் விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை