சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா..

by Chandru, Jan 5, 2021, 17:21 PM IST

கோலிவுட் நடிகர்கள் பலரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறி இருக்கும் நிலையில் தற்போது அழகு நடிகர் ஒருவரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். தல அஜீத் தான் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தார். அந்த படங்கள் வரவேற்பு பெற்றது. அதே போல் விஜய்யும் பிகில் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் நடித்தார். அசுரன் படத்தில் தனுஷ் சால்ட் அண்ட் பெபர் தோற்றத்தில் நடித்தார். மாதவன், விஜய்சேதுபதி இப்படி பல ஹீரோக்கள் நரை முடி தோற்றத்தில் நடிக்கின்றனர்.

எப்போதும் பிளாக் ஹேர் ஸ்டைலுடன் இளவட்டங்களை வளைத்து போடும் சூர்யா தற்போது சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். அவர் ஜிம்மில் பயிற்சி செய்துவிட்டு தம்ஸ் அப் காட்டும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் காணப்படுகிறார். சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒடிடி தளத்தில் வெளியானது. அதிலும் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து வெற்றி மாறன் இயக்கும் வாடி வாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இது தவிர கவுதம் மேனன் படம், பாண்டிராஜ் படம் என 3 படங்களில் நடிக்க உள்ளார். வாடிவாசல் படத்துக்காக சூர்யா மாடுபிடி விளையாட்டு பயிற்சி பெறுகிறார். பாண்டிராஜ் படம் கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கிறது. கவுதம் மேனன் படம் காதல் பின்னணியில் உருவாகும் என்று தெரிகிறது. சிங்கம் படத்தை ஒன்று முதல் மூன்று பாகம் இயக்கிய ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அந்த படம் டிராப் செய்யப்பட்டுவிட்டது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை