2000 பாடல் எழுதிய பாடலாசிரியர் மரணம்..

by Chandru, Jan 6, 2021, 10:02 AM IST

கொரோனா கால ஊரடங்கு மற்றும் ஊராங்கு தளர்விலும் பிரபலங்களின் மரணங்கள் யாரும் எதிர்ப்பாராத வகையிலும் அதிர்ச்சி தரும் வகையிலும் நிகழ்ந்து வருகிறது.
கொரோனா தொற்று பாதித்த இறந்தவர்களைவிட மாரடைப்பில் பலர் மரணம் அடைந்தனர். பாலிவுட் நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான், கன்னட நடிகர் அர்ஜூன் சார்ஜா. டிவி நடிகர் வடிவேலு பாலாஜி, பாடகர் எஸ்.பி.பால சுப்ரணியம் இப்படி பல பிரபலங்கள் மரணத்தை தழுவினார்கள். ஊரடங்கு காலத்தில் மரணத்தை தழுவியவர்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. கொரோனா பாதிப்பில் சிக்கி அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வி.சுவாமிநாதன், கே.பாலு மரணம் அடைந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில் தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யும் போது அதற்கு பாடல்கள் வசனம் எழுதுபவர் வென்னில கண்டி (வயது 64).

இவர் நேற்று சென்னையில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். இதுவரை இவர் தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகும்போது அதற்கு 2000 பாடல்கள் வரை எழுதி உள்ளார். 300 படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர். இவர் எழுதிய பல பாடல்கள் தெலுக்கில் ஹிட் ஆகி இருக்கின்றன. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கர் என்ற மகன் தந்தையைப் போல் டப்பிங் படங்களுக்கு பாடல், வசனம் எழுதுகிறார். மற்றொரு மகன் ரகெண்டு மவுலி பாடல் எழுதுவதுடன் பாடகர், நடிகராக இருக்கிறார்.

You'r reading 2000 பாடல் எழுதிய பாடலாசிரியர் மரணம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை