மாஸ்டர் கிளைமாக்ஸில் பரபரப்பு காட்சி இணைப்பு.. என்ன தெரியுமா?

by Chandru, Jan 6, 2021, 12:25 PM IST

கொரோனா கால லாக்டவுனால் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் 'மாஸ்டர்' படம் வரும் 13ம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. நூறு சதவீத டிக்கெட் அனுமதிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் தியேட்டரில் பொங்கல் அன்று பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அப்படம் பற்றிய தகவல்கள் பரபரப்பாக வெளியாகி வருகிறது.தற்போது மாஸ்டர் படத்தின் தியேட்டர் ரன்னிங் டைம் வெளியாகி இருக்கிறது. சமீபத்திய தகவலின்படி 'மாஸ்டர்' அதிரடி படத்திற்கு 20 மாற்றங்களுடன் தணிக்கைகளில் யு/ஏ சான்று கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் 35 வினாடிகள் ஆகும்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதியிடமிருந்து சுமார் 3 மணிநேர அதிரடி பொழுது போக்காக இப்படம் இருக்கும். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு விஜய் நெய்வேலியில் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தபோது அவரது சென்னை வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. விஜய்யை படப்பிடிப்பிலிருந்து அதிகாரிகள் காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர். ஆனால் விஜய் வீட்டில் எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை. இது பரபரப்பானது. பின்னர் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க நெய்வேலி சென்றார். அப்போது அவரை காண நெய்வேலி சுரங்கம் வாயிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதையறிந்து படப்பிடிப்பிலிருந்து வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்த விஜய் ரசிகர்கள் கூட்டத்துடன் வேன் மீது நின்றபடி செல்பி படம் எடுத்தார். அந்த காட்சி படத்தில் இணைக்கப்படிருக்கிறது.

இது நிச்சயமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் விஷயமாகும். 'மாஸ்டர்' படத்துக்கான முன்பதிவு ஏற்கனவே ஒரு சில தியேட்டர்களில் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை மகிழ்விக்க ஆன்லைனில் அவ்வப்போது சில துண்டு காட்சிகளை பகிர்கின்றனர், 'வாத்தி வரும்' பாடலில் இருந்து விஜய்யின் விளம்பர வீடியோ ஒன்று நேற்று வெளியிடப்பட்டது, மேலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் விஜய் பங்கேற்பது போன்ற அக்காட்சியாக அது இருந்தது. 'மாஸ்டர்' படத்தில் முதல் முறையாக பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிக்கிறார். இதில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் உள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை