தற்கொலை செய்த நடிகர்-நடிகை நடித்த படங்கள் வைரல்..

by Chandru, Jan 6, 2021, 14:25 PM IST

பிரபல நடிகர், நடிகைகள் சிலர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். அந்த சம்பவங்களில் பலரது பெயர்கள் அடிபட்டாலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதாக நினைவில்லை. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கிரிக்கெட் வீரர் தோனி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி, குடும்பத்தினர், நண்பர்கள் என 40 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அந்த வழக்கு தற்போது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்கொலைக்கு காரணமாக இருந்தது யார் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்ததாக கைது செய்ய்யப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையிலிருந்து அவர் தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். மற்றபடி சுஷாந்த் வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தகவல் எதுவும் இல்லை. சுஷாந்த் மறைவிற்கு பிறகு அவர் நடித்ததில் பேச்சாரே என்ற படம் ஆன்லைனில் வெளியாகி உலக அலவில் முதலிடத்தை பிடித்தது. கடந்த 2 மாதத்துக்கு முன் தமிழ் டிவி நடிகை வி ஜே சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அவரது மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது கணவர் ஹேம்நாத் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ஒன்றரை கோடி பண மோசடியிலும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும். முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. கால்ஸ் என்ற படத்தில் சித்ரா நடித்தார். அப்படம் வெளியாவதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். தற்போது கால்ஸ் படத்தின் டீஸர் யூ டியூபில் சாதனை படைத்து வருகிறது.

சித்ரா இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (first look) ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டிஸரும், செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படத்தின் இயக்குனரான ஜெ. சபரிஷ் கூறும்போது, "நம்மிடையே சித்ரா தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள். மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்