கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்

மொத்த பணியிடங்கள்: 3

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர்:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இரவுக்காவலர்:
எழுத, படிக்க & மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

ஈப்பு ஓட்டுநர்:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய அரசுச் சட்டம்59/1988)-ன்படி கீழான தகுதியுடைய அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- (15700-50000)

இரவுக்காவலர் – ரூ.15,700/- (15700-50000)

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500/- (19500-62000)

விண்ணப்பிக்க: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25.01.2021க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

முகவரி:
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
அருப்புக்கோட்டை.

Advertisement

READ MORE ABOUT :

/body>