வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி புகழ்.. அடுத்தடுத்து காத்திருக்கும் சினிமா வாய்ப்புகள்..

by Logeswari, Jan 6, 2021, 19:01 PM IST

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஆனால் சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி மக்களின் மனதில் முதல் இடமாக குடிபெயர்ந்துள்ளது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சமையல் மற்றும் காமெடி ஆகிய இரண்டிலும் சரிசமமாக கலக்கி கொண்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை இந்த நிகழ்ச்சியை மிகவும் ரசித்து பார்க்கின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இரண்டாவது சீசன் நடந்து கொண்டு வருகிறது. பாடகி ஷிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா போன்ற பல கோமாளிகளால் தான் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது. இவர்களை இந்த நிகழ்ச்சியின் ஹீரோக்கள் என்று கூட சொல்லலாம். கோமாளியாக நடித்து வரும் புகழுக்கு வெள்ளி திரையில் நடிக்க பல வாய்ப்புகள் கதவை தட்டுகின்றன.

இவர் தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் சந்தானம் நடிக்கும் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளாராம். புகழ் சாதாரண கிராமத்தில் பிறந்து தனது சுய முயற்சியால் வெள்ளி திரைக்கு சென்றுள்ளார். இதனால் புகழ் ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

You'r reading வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி புகழ்.. அடுத்தடுத்து காத்திருக்கும் சினிமா வாய்ப்புகள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை