தமிழ் நடிகைக்கு உருமாறிய கொரோனா.. மருத்துவமனையில் சேர மறுத்து அடம்..

by Chandru, Jan 7, 2021, 10:50 AM IST

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப் பட்டு சகஜ வாழ்க்கை மெல்லத் திரும்பும் நிலையிலும் கொரோனா பரவல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. படப் பிடிப்புகள் ரத்து, போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம் எல்லாம் நடந்தது. மக்கள் நடமாட்டம் பெரும் பகுதி குறைந்த நிலையிலும் கொரோனா தொற்று நிலவியது. திரையுலகில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சரத் குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா , ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி எனப் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள்.

கடந்த வாரம் நடிகர் ராம் சரண், வருன் தேஜ் போன்ற தெலுங்கு நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ராம் சரண், அலியா பட் நடிக்கவிருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ஷூட்டிங்கை இயக்குனர் ராஜமவுலி தள்ளிவைத்திருக்கிறார்.இந்நிலையில் தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத் தை இயக்கிய டைரக்டர் கிரிஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் தெலுங்கில் சமீபத்தில் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் படத்தின் படப் பிடிப்பை முடித்தார். பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். முன்னதாக அவர் பாதுகாப்பு காரணமாக கொரோனா பரிசோதனை செய்துக்கொண் டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கிறார் கிரிஷ். சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் குணமாகி வருகிறார்.கொரோனா தொற்று திரையுல கில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா பகுதி யிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங் களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதில் நடித்த வந்த ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். ஆனாலும் அடுத்த நாள் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 நாள் சிகிச்சை பெற்று குணம் ஆகி சென்னை திரும்பினார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அண்ணாத்த படப்பிடிப்பில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்டார்.

பிரிட்டிஷ் இந்திய நடிகை பனிதா சந்து. இவர் தமிழில் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் ஹீரோயினாக நடித்தார். முன்னதாக இந்தியில் வருண் படம் மூல அறிமுகமானார். பனிதா சந்த் அமெரிக்காவில் தங்கி இருந்தார். படப்பிடிப்பில் பங்கேற்க நேற்று மும்பை வந்தார். அங்கிருந்து கொல்கத்தாவில் நடக்கவிருந்த படப் பிடிப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். விமான நிலையத்தில் பனிதா வந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கச் சுகாதார அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அவர் மருத்துமனைக்கு வரமறுத்தார். இதுகுறித்து பிரிட்டிஷ் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் பனிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

You'r reading தமிழ் நடிகைக்கு உருமாறிய கொரோனா.. மருத்துவமனையில் சேர மறுத்து அடம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை