பெங்களூரு: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் நடிகை குட்டி ராதிகா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான யுவராஜ் என்பவர் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்து இருந்தார். இதனயைடுத்து, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், யுவராஜின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் நடிகை குட்டி ராதிகா, அவரது சகோதரர் ரவிராஜின் வங்கி கணக்கிற்கு ரூ.1½ கோடி வரை பணம் மாற்றம் செய்யப்ட்டது. கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, மோசடி தொடர்பாக விளக்கம் அளித்த நடிகை குட்டி ராதிகாவிற்கு சகோதரர் ரவிராஜிக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி, இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரான நடிகை குட்டி ராதிகா வழக்கு குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகை குட்டி ராதிகா, ஒரு படத்தில் நடிக்க ரூ.15 லட்சம் எனது வங்கி கணக்குக்கு யுவராஜ் அனுப்பினார். அதன்பின்னர் அவர் உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார்.
எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும், இந்த வழக்கில் இருந்து தப்பிக்க அரசியல் பிரமுகர்களுடன், நடிகை குட்டி ராதிகா செல்போனில் பேசியதாக சில ஆடியோக்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்த ராதிகா, என்னை காப்பாற்ற நான் எந்த அரசியல் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசவில்லை. எனக்கும் அரசியல் கட்சி தலைவர்களை தெரியும். அவர்கள் மூலம் தப்பிக்க நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.