உலக அழகியுடன் நடிக்க ஐதராபாத் பறந்த நடிகை...

by Chandru, Jan 9, 2021, 16:34 PM IST

கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். அதே போல் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல் ரெண்டு காதல் படப் பிடிப்புக்காக ஐதராபாதில் சமந்தா நடித்த காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார். ராமோஜிராவ் ஸ்டுடியோவை நட்சத்திர மயமாக இருந்தது. அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து மொத்த ஷூட்டிங்கையும் ஏறக்கட்டி விட்டு ஆளாளுக்கு ஊருக்குப் பறந்தனர். அந்த பரபரப்பு முடிந்தநிலையில் தற்போது மீண்டும் ஐதராபாத் ராமோ ஜிராவ் ஸ்டுடியோ களைகட்டியிருக்கிறது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தொடங்கி இருக்கிறது. இதில் பங்கேற்க முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஐதராபாத் வந்திருக்கிறார். அவருக்குத் துணையாகக் கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவும் வந்திருக்கின்றனர். மூவருமே சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வனுக்காக சரத்குமாருடன் ஐஸ்வர்யாராய் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இதற்காகப் பிரமாண்ட அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இப்படத்துக்காக த்ரிஷா சென்னையிலிருந்து ஐதராபாத் சென்றிருக்கிறார். நேற்று ஐதராபாத் விமான நிலையம் வந்த த்ரிஷா தனது ஹோட்டலுக்கு புறப்படுவதற்கு முன்பு கேமராவுக்கு போஸ் கொடுத்தார். பொன்னியன் செல்வன் படப் பிடிப்பில் த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்று நடிக்க உள்ளனர்.மணிரத்னம் தனது லட்சிய படமாக பொன்னியன் செல்வணை இயக்கி வருகிறார். கல்கி கிருஷ்ண மூர்த்தி எழுதிய சரித்திர நாவல் தற்போது படமாகிறது. கொரோனா லாக்டவுனில் மணிரத்னம், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு அளித்த பதிலில், பொன்னியின் செல்வன் இரண்டு பகுதிகளாக உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.அருள்மொழி வர்மன் மற்றும் ஆதித்யா கரிகாலன் ஆகியோரின் சகோதரி குண்டவாய் வேடத்தில் த்ரிஷா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, ​ ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடிக்கின்றனர். இலக்கிய நாவலைப் பார்த்தால், குண்ட வாய் கதாபாத்திரத்துக்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சி பெற்றார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்