விக்ரமுடன் மோதும் கிரிக்கெட் வீரர்.. டீஸர் வெளியீடு

by Chandru, Jan 9, 2021, 16:51 PM IST

நடிகர் விக்ரம் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அந்நியன், ஐ போன்ற படங்களில் ஸ்பிளிட் பர்சனாலிட்டி மற்றும் பாக்ஸராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கோப்ரா என்ற படத்தில் கணக்கியல் வல்லுனராக நடிக்கிறார். ஈதனை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். விக்ரம் கதாபாத்திரத்தின் பெயரும் கோப்ரா என்று இன்று வெளியாகி உள்ள கோப்ரா பட டீஸரில் தெரியவந்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்காக லலித் குமார் தயாரிக்கும் இப்படம் 2020 ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் ஊரடங்கால் படப்பிடிப்பு காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இன்று படத்தின் தயாரிப்பாளர்கள் டீஸரை வெளியிட்டனர், இது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.படத்தின் தயாரிப்பாளர்கள், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டீசரை அதிகாரப்பூர்வ சமூக ட்வீட்டரில் வெளியிட்டனர். "எண்களின் உலகம் மற்றும் மேதை சியான்விக்ரம், கோப்ரா டீஸர் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.கோப்ரா டீஸர் புதிராக தெரிந்தது, படத்தில் விக்ரம் ஒரு கணிதவியலாளராக நடிக்கிறார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான்பதான் இதன் மூலம் தனது நடிப்பில் அறிமுகமாகிறார். அவர் படத்தில் ஒரு இன்டர் போல் அதிகாரியாக நடிக்கிறார் மற்றும் அவரது கதாபாத்திரம் வெவ்வேறு நிழல்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. விக்ரமுடன் அவர் எண்களில் மைண்ட் கேம் உருவாக்கி மோதுகிறார். டீஸர் வெளியாகி சில மணி நேரத்தில் 2 மில்லியன் வியூஸ் கடந்திருக்கிறது கோப்ரா.ஏழு வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி 2020 இல் வெளியிடப்பட்டது, இது இணையத்தில் உடனடியாக வரவேற்பைப் பெற்றது. விக்ரம் இந்த படத்திற்காக 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிப்பார் என்று தெரிக்கிறது. விக்ரம் இதையடுத்து பொன்னியின் செல்வனில் நடிக்கிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

You'r reading விக்ரமுடன் மோதும் கிரிக்கெட் வீரர்.. டீஸர் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை