டாப்ஸி கவர்ச்சி படத்துக்கு காதலன் போட்ட கமெண்ட்..

by Chandru, Jan 10, 2021, 10:00 AM IST

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, வா ராஜா வா என சில படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். பெயரிய வாய்ப்புகள் வராத நிலையில் இந்தியில் நடிக்கச் சென்றார். அங்கு முன்னணி நடிகை என்ற பட்டியலில் இல்லாவிட்டாலும் வித்தியாசமான நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார். அமிதாப்பச்சனுடன் நடித்த மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் பிங்க். இது வரவேற்பை பெற்று தந்தது. இப்படம் தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் உருவானது. டாப்ஸி வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான டப்பட் என்ற படமும் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தது. தற்போது தடகள வீராங்கனை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடுமையான ஓட்டப் பயிற்சிகளை முறைப்படி மேற்கொண்டார். இதுதவிர விஜய் சேதுயுடன் ஜன கன மன படம் உள்பட 2 தமிழ் படங்களில் நடிக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே உள்ள தனது தொகுப்பிலிருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஒரு அழகிய போட்டோ ஷூட்டிலிருந்து ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். சாம்பல் நிற மாக்ஸி மாடர்ன் உடையில் சும்மா கும்முனு கவர்ச்சியாக இருந்த அந்த படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதுகுறித்து டாப்ஸி வெளியிட்ட மெசேஜில் நம்பிக்கை என்றால் என்பதுபற்றி குறிப்பிட்டார். “நீங்கள் எல்லோரையும் விட சிறந்தவர் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கைதான் உங்களை வாழ்க்கையில் நடை போட வைக்கும். முதலில் வேறு யாருடனும் உங்களை ஒப்பிட வேண்டாம். நீங்கள் தான் சிறந்தவர் என்ற நம்புங்கள் என்றார். டாப்ஸி வெளியிட்ட அழகு படத்துக்கு ரசிகர்கள் அன்பைப் பொழியத் தொடங்கினர்.

இதில் சிறப்பு அம்சமாக டாப்ஸியின் காதலன், மற்றும் பாய்ஃபிரண்டு போட்ட கமெண்ட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் மெசேஜாக பகிரராமல், இரண்டு கண்களிலும் இதய வடிவில் கூலிங்கிளாஸ் அணிந்தபடி சிரிக்கும் இமோஜிக்கள் படத்தை வெளியிட்டு டாப்ஸியின் புகைப்படம் என் கண்களிலும், இதயத்திலும் பதிந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்தி ஆச்சரியப்படுத்தி இருந்தார். டாப்ஸி தனது காதல் பற்றியோ, பாய்ஃபிரண்ட் பற்றியோ அதிகம் வெளிக்காட்டுவதில்லை. அவரது காதலன் மத்தியாஸ் போ டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு தொழில்முறை பேட்மிண்டன் வீரர். அவர் 2015 இல் ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2012 கோடைகால ஒலிம் பிக்கிலும் அவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். மத்தி யாஸுடனான தனது உறவை நடிகை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், டாப்ஸி மற்றும் மத்தியாஸ் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை