பிசாசு 2வுக்கு குரல் தர அமெரிக்காவிலிருந்து வந்த பாடகர்..

by Chandru, Jan 10, 2021, 14:10 PM IST

அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் இடப்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம். இதற்கு முன்பே ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால், நானும் ரவுடிதான் படத்தில் என்னை மட்டும் காதலி, எந்திரன் படத்தில் இந்திர லோகத்து சுந்தரியே என ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். சித் சென்னையில் பிறந்தாலும் வளர்ந்தது படித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். நான்கு வயதிலிருந்தே கர்நாடக இசையில் பயிற்சி பெற்று வந்தார். அது அவருக்கு ஒரு வலுவான இசை அடித்தளத்தை அளித்தது. பிரபல பாடகர் ஆன பிறகும் அவர் தினமும் சுமார் மூன்று மணி நேரம் பயிற்சி செய்கிறார். சிறுவயதிலிருந்தே ரஹ்மான் இசையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பணிபுரியத் தொடங்கினார்.

எப்போதும் கற்றுக்கொள்ள எப்போதும் ஆர்வமாகவும் பசியுடனும் இருக்க வேண்டும் என்று ரஹ்மான் அவருக்கு சொல்லித்தந்திருக்கும் அட்வைஸ். அதை எப்போதும் பின்பற்றுகிறார் சித். அமெரிக்காவில் வளர்ந்ததால் அமெரிக்க உச்சரிப்பு பாடல் பாடும்போது அவருக்கு ஆரம்பத்தில் சில சிக்கல்களை உருவாக்கியது என்று அவர் கூறுகிறார். தமிழ் பாடல்கள் பாடும்போது அமெரிக்க உச்சரிப்பு இடையூறாக இருக்கும். தமிழ் என் தாய் மொழி என்றாலும், சில சமயங்களில் மொழியில் பாடல்களைப் பாடும்போது சரியான கற்பனையையும் உச்சரிப்பையும் வெளிக்கொணர எனக்கு வழிகாட்டுதல் தேவைப்படும் என்கிறார் சித். அமெரிக்காவில் வசிக்கும் அவர் இப்போதெல்லாம் பாடல்களை அங்குள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்து அனுப்பி வைத்து வருகிறார்.

ஆனால் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்துக்காக அவர் சென்னை வந்து நேரில் பாடல் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு 2 நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம் என்கிறது படக்குழு. ஏற்கனவே இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிசாசு 2 படத்தின் ஒளிப்பதிவை சிவா சாந்தகுமார் செய்துவருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை