கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி நடிகை..

by Chandru, Jan 10, 2021, 16:12 PM IST

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் முதல் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பிடியில் உலகம் சிக்கியுள்ளது. இந்தியாவிலும் சுமார் ஒரு கோடி ஒஏர் கொரோனா தொற்றுகுள்ளானார்கள். கொரோனா தடுப்பூசி கண்டுபுடிக்க பல நாடுகள் ஆய்வில் ஈடுப்பட்டன. பல்வேறு ஆராய்ச்சிகள்க்கு பிறகு சமீபத்தில் கொரோனா தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் தடுப்பூசி போடுவதறகான ஆயத்த பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஜனவரி 16 முதல் மூன்று கோடி சுகாதார ஊழியர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த அச்சத்தை போக்கவும் பிரசாரங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியில் 1991ம் ஆண்டு வெளியான படம் ஹம். அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஷில்பா ஷிரோட்கர். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக்கொண்டிருந்த இவர் தமிழில் அரசியல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடித்துள்ளார். இவர் தனது கையில் ஊசி போட்டுக்கொண்டதற்கு அடையாளமாக ஒரு பஞ்சு கட்டப்பட்டிருக்கும் படத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

"தடுப்பூசி பாதுகாப்பானது! நார்மலானது. இந்த ஆண்டு இந்தியா வருகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். நடிகை ஷில்பா ஷிரோத்கர் துபாயில் தனது கணவர் வங்கியாளர் அபரேஷ் ரஞ்சித் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது சகோதரி நம்ரதா ஷிரோட்கர் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார். ஷில்பா ஷிரோட்கருக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்த ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டது. டிசம்பர் கடைசி வாரத்திலிருந்து அங்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கோவுட்டில் சரத்குமார், விஷால், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் நிக்கி கல்ராணி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் என பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு தொற்றிலிருந்து விடுபட்டார்கள். கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை ஊட்டும் அருமருந்தாக கிடைத்திருக்கிறது எனலாம்.

More Cinema News


அண்மைய செய்திகள்