18 வயது மகன் உள்ள நடிகையை காதலிப்பதா? இளவயது நடிகருக்கு நெட்டிஸன்கள் டோஸ்..

Advertisement

நடிகர், நடிகைகளின் வாழ்கையை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்றபடி ரியாக்‌ஷன் வெளிப்படுத்தும் ரசிகர்கள் அதிகம். அவர் யாருக்காவது உதவினால் பாராட்டுவதும் தவறாக நடந்தால் டோஸ்விடுவதும் நடக்கிறது. இப்படித்தான் ஒரு நடிகர் தன்னை விட வயதில் மூத்த நடிகையை அதுவும் 18 வயது மகனைப் பெற்று வளர்த்து வருபவரை அவரை விட வயதில் குறைந்த நடிகருக்கு டோஸ் விட்டுள்ளனர்.இந்தி நடிகர் அர்ஜுன் கபூர். இவர் பாலிவுட் படத் தயாரிப்பாளரும், நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிப்பவருமான போனி கபூரின் மகன். போனிகபூருக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் மோனா சோரி கபூர் மற்றொருவர் நடிகை ஸ்ரீதேவி. முதல் மனைவியின் மகன்தான் அர்ஜூன் கபூர், இவர் இந்தி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அர்ஜூன் கபூர் இந்தி நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். இவர்கள் காதலிப்பதைத்தான் நெட்டிஸன்கள் வறுத்தெடுக்கின்றனர். மலாய்கா அரோரா சல்மான்கானின் தம்பி அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 18 வயதில் அர்ஹான் என்கிற மகன் இருக்கிறார். 35 வயதாகும் அர்ஜுன் கபூர் 47 வயது மலாய்காவை காதலிக்கிறார். இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வசித்து வருகின்றனர். மலாய்கா மற்றும் அர்ஜூன் கபூர் இருவருமே கடந்த மாதங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.

சமீபத்தில் இருவரும் கோவாவுக்குச் சென்றனர். அங்கு இருவரும் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்டனர். மலாய்கா நீச்சல் உடை அணிந்து குளத்தில் டைவ் செய்யும் காட்சியைக் கவர்ச்சியாக அர்ஜூன் கபூர் புகைப் படம் எடுத்தார். அந்த படத்தை நெட்டில் பகிர்ந்தார். மலாய்கா தனக்காகச் சமையல் செய்த படத்தையும் நெட்டில் வெளியிட்டார். மலாய்கா அரோரா எந்த காரியம் செய்தாலும் ஆஹா ஓஹோ என்று அர்ஜூன் கபூர் புகழ்ந்து தள்ளுகிறார். ஒரு கட்டத்துக்கு மேல் அதைப் பொறுக்க முடியாமல் நெட்டிஸன்கள் அர்ஜூனை கலாய்க்கத் தொடங்கி டோஸ் விட்டு வருகின்றனர்.18 வயது மகனை பெற்று வளர்க்கும் தாயைக் காதலிக்கிறீர்களே, உங்களுக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? தங்கை அன்ஷுலா பிறந்த நாளுக்கு உடனிருந்து வாழ்த்து சொல்லாமல் அவரை தனியாக தவிக்கவிட்டுக் காதலியுடன் சுற்றுவது முக்கியமாகி விட்டதா? ஐஸ் வைப்பதற்காக எனக்கு அது செய்தார், இது செய்தார் என்று நெட்டில் பெருமை பீற்றிக்கொள்ளாதீர்கள் என வசை மாரி பொழிந்தனர்.

மலாய்கா கடந்த 2017ம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.விவாகரத்திற்குப் பிறகு அர்ஹான் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டில் இருந்து அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் மலாய்கா. இந்த காதல் போனிகபூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அர்ஜுன் கபூர் தற்போது பூத் போலீஸ் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>