டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர்..

by Chandru, Jan 11, 2021, 15:00 PM IST

ஆன்லைன் வகுப்பு என்று சொல்லி பள்ளி மாணவ, மாணவிகளின் இளமைக் கால அனுபவங்கள் கடந்த ஒரு வருடமாகக் காணாமல் போயிருப்பதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. கல்வியாளர்கள் யாரும் சிந்தித்தது போல் தெரியவில்லை. அதை ஒரு திரைப்படக் குழு உன்னிப்பாக சிந்தித்திருக்கிறது.கொரோனா போய்விட்டது எனச் சிலரும் இல்லை இல்லை உருமாறிய கொரோனாவால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இது இப்படியிருக்க தமிழ் நாட்டில் மாஸ்டருக்கு 100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் யோசிக்கும் வேளையில் கொரோனாவால் உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை கவனிக்கத் தவறிவிட்டோம். பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு விளையாட்டு மற்றும் அவர்களது காலத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன.

கிட்ஸ் Vs கொரோனா : பிரபஞ்சத்தைக் காக்கும் பேரிசை என்ற ஒரு இசை ஆல்பத்தை திரைப்படக் குழு இணைந்து உருவாக்கி உள்ளது. வெறும் குழந்தைகளின் உலகம் பற்றிப் பேசுவதோடு நில்லாமல் உலகம் முழுக்க மனித நேயம் வற்றிப் போய் இனம் மொழி மத வேற்றுமைகள் அதிகரித்து விட்டதும் குழந்தைகளின் மீது நாடுகள் தொடுக்கும் வன்முறையும் , இயற்கையை அழித்தொழிக்கும் மனிதனின் சுய நலமும் எனப் பல முனைகளில் கொரானாவுக்கான காரணங்களை அலசுகிறது இப் பாடல். தாஜ்நூர் இசையில் ரமேஷ் வைத்யா வரிகளில் அஜயன் பாலா இயக்கத்தில் நடிகர் ஸ்டண்ட்சில்வா சிறப்புத் தோற்றத்தில் குழந்தைகளுடன் ஆடிப்பாட உருவாக்கியிருக்கிறது கிட்ஸ் Vs கொரோனா பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை எனும் துள்ளல் இசை காணோளி ஆல்பம். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் தை பொங்கலன்று வெளியாகவிருக்கிறது . கனடாவைச் சேர்ந்த சீனிவாசன் சோம சுந்தரம் தனது Ts Film productions,Canada சார்பில் இதைத் தயாரித்துள்ளார்.

ஸ்டண்ட் சில்வா 2018ம் ஆண்டு வெளியான எந்திரன் 2.0 படத்தில் சண்டைக் காட்சிகள் அமைத்ததுடன் பல்வேறு படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகவும், பணியாற்றி இருக்கிறார். நடித்தும் இருக்கிறார். இசை அமைப்பாளர் தாஜ்நூர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றியதுடன் வம்சம் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். பல்வேறு படங்களுக்கு இசை அமைத்ததுடன் திருக்குறளை இசை வடிவில் அமைத்து சாதனை படைத்திருக்கிறார். அஜயன் பாலா மதராஸ பட்டணம், சென்னையில் ஒரு நாள், மனிதன் உள்ளிட்ட 15 படங்களுக்குத் திரைக்கதை எழுதியதுடன் படங்களும் இயக்கி உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை