சின்னத்திரை சங்கத்துக்கு மனோபாலா தலைவரான விவகாரம்.. பெப்சி ஆர்.கே.செல்வமணி முன் தீர்வு..

Advertisement

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சனை பெப்ஸி மூலம் தீர்ந்தது என்று சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது:கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை நீடித்து ஒரு குழப்பமான நிலை நிலவியது. இப்போது அந்த பிரச்சினை தீர்ந்து சூழ்நிலை தெளிவாகியுள்ளது.சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன.

பொதுக்குழு உறுப்பினர்கள் என் தலைமையிலான சங்கம் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்குரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக எம். டி. மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மனோபாலா ராஜினாமா செய்தார் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த பி.வி.ஆர். சுப்பிரமணியம் என்கிற ஜெயந்த், கே.ரிஷி, விஜய் ஆனந்த், ஈஸ்வர், சிவ கவிதா, நீபா, ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.சின்னத்திரை நடிகர் சங்கம் சார்ந்து நிலவிய குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

சங்க அலுவலகம் இன்றே திறக்கப்பட்டுவிட்டது. உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இனி சங்கத்தின் நடவடிக்கைகள் துரிதமாகத் தொடங்கி நடை பெறும். சங்கத்திற்குப் புதிய இடம் வாங்கி கட்டடம் கட்டித் திறப்பு விழா செய்யும் திட்டத்தோடு பணிகளைத் தொடங்குகிறோம். அன்று அந்தச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கும், தொழிலாளர் நலத்துறை ஆணையர், காவல்துறை ஆணையர், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்ட பின்னும் மனோபாலா தரப்பு குரல் எழுப்பிக் கொண்டிருந்தது.

இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அனைவரும் விரும்பினோம். மீண்டும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. செல்வ மணி முன்னிலையில் கூடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பதினொரு வாக்குகள் வித்தியாசத்தில் ரவிவர்மாவாகிய நான் வெற்றி பெற்றேன். எனவே இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இவ்வாறு ரவிவர்மா கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>