Tuesday, Sep 21, 2021

ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் திடீர் எதிர்ப்பு.. ஒ டி டி ரிலீஸ் என்றதால் பரபரப்பு..

by Chandru Jan 12, 2021, 10:39 AM IST

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்துக்காகச் சிம்பு தனது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைத்து ஸ்லிம் தோற்றதுக்கு மாறினார். 28 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பைச் சிம்பு முடித்துக்கொடுத்தார். இதில் நிதி அகர்வால், நந்திதா சுவேதா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சிம்பு,ஈஸ்வரன் படம் இவ்வளவு விரைவாக முடிந்தது எல்லோருக்குமே ஒரு ஆச்சரியம். நானே வேகமாக இருப்பேன் ஆனால் இயக்குனர் சுசீந்திரன் என்னை விட வேகம். ஒரு காட்சியை முடித்துத் திரும்புவதற்குள் அடுத்த காட்சிக்குத் தயாராக இருப்பார் என்றார்.

பின்னர் சிம்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில். ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளி வர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காகமெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் நடித்துள்ள படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவு காலம் வரவேண்டுமெனப் பொறுத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும் போது மக்கள் திரையரங்குக்குப் பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும். விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஈஸ்வரன் படம் பற்றிப் பரபரப்பு ஏற்பட்டது. வெளி நாடுகளில் கொரோனா பரவல் காரணமாகச் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா மீண்டும் பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஈஸ்வரன் படம் தியேட்டரில் வெளிநாடுகளில் வெளியாகாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் அதே தினத்தில் வெளிநாட்டில் ஒடிடி தளத்தில் ஈஸ்வரன் படத்தை காணலாம் என்று படத் தயாரிப்பாளர் அறிவித்தார். அதைக்கண்டு ஷாக் ஆன தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம்,வெளிநாடுகளில் ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளதாக டெக்னிக்கலாக அறிவித்துள்ளனர். அங்கு வெளியானாலும் இந்தியாவில் பாதிப்பு ஏற்படும்.ஒருமுறைமிதை அனுமதித்தால் அதுவே வழக்கமாகி விடும் எனவே தியேட்டர்களில் ஈஸ்வரன் படத்தை வெளியிட மாட்டோம் என்று ஆடியோவில் பேசி அறிவித்தார். இது ஈஸ்வரன் படத் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு ஒடிடியில் படம் வெளியிடும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

You'r reading ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் திடீர் எதிர்ப்பு.. ஒ டி டி ரிலீஸ் என்றதால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News