நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென்று தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி பாப்புளர் ஆனார். விஜய தேவர கொண்டாவுடன் டியர் காம் ரேட், கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றதுடன் மகேஷ் பாபுவுடன் சரிலேறு நிக்கெவரு படத்திலும் நடித்தார். தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். இதையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். அடுத்து இந்தி படத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா பாணியை பின்பற்றி தெலுங்கு படத்தில் நடிக்க வந்திருக்கிறார். மற்றொரு கன்னட நடிகை. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஜோடியாக 2015ம் ஆண்டு வஜ்ரகயா என்ற படத்தில் நடித்தவர் நபா நடேஷ்.
அதன்பிறகு லீ, ஷஹீபா படங்களில் நடித்தவர் 2018ம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடிக்க வந்தார். நானு டோச்சுகுண்டுவடே என்ற படத்தில் சுதீர்பாபு ஜோடியாக நடித்தார். அப்படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ராம் பொதேனி ஹீரோவாக நடித்த ஐ ஸ்மார்ட் படத்தில் நடித்தார். புரி ஜெகநாத் இப்படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது,. அதன்பிறகு நபாவுக்கு புதிய படங்கள் தேடி வர ஆரம்பித்துள்ளன. கொரோனா கால லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிடந்த நபா கொரோனா தளர்வில் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துக்கொண்டு நடிக்கிறார். இவர் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க துபாய் சென்றார். நிதின் ஜோடியாக அப்படத்தில் நடித்தார்.
படக்குழுவினர் அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தனர். தனி அறையில் நபா நடேஷ் தங்கி இருந்தார். பாத்ரூமிற்கு சென்றவர் அங்கு தரையில் வழுக்கி தவறி கீழே சொத்தென்று விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த படக்குழுவினர் அவர் காலில் அடிபட்டு துடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், இரண்டு வாரம் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி 2 வாரம் அவர் துபாயிலேயே தங்கி இருந்தார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட ரபா இதுவாழ்நாள் முழுவதும் ஒரு கெட்ட நினைவாக பதிந்துவிட்டது என்றார். நபாஷா தற்போது விரைவில் அவர் நடித்துள்ள பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸின் அல்லுடு அதுர்ஸ் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.