கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மற்றொரு நடிகர்.. ஷூட்டிங்கிற்கு ரெடி..

by Chandru, Jan 13, 2021, 09:19 AM IST

கொரோனா தொற்றுக்கு பல நடிகர் , நடிகைகள் உள்ளாகினர். இவர்களில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். சிமு. அனுஷ்கா நடித்த வானம் பட இயக்குனர் கிரிஷ் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆதித்யவர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்த பனிதா சந்த் அமெரிக்காவிலிருந்து மும்பை வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று குணம் ஆனவர்களில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகை நிஹாரிகா திருமணத்தில் பங்கேற்க உதய்பூர் சென்று திரும்பிய நடிகர்கள் ராம் சரண், வருண் தேஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ராம் சரணும் வேடம் ஏற்று நடிக்கிறார். இருவரும் இணைந்து அசத்தல் போட்டி நடனம் ஒன்றுக்கும், எஸ் எஸ்.ராஜ மவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்கவும் ராம் சரண் தயாராகி வந்த நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார், இவரைப்போலவே நடிகர் வருண் தேஜ் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தார். இதுபற்றி வருண் தேஜ் வெளியிட்ட மெசேஜில், கொரோனா வைரஸ் பாசிடிவ் ஆனதால் என்னை தனிமைப் படுத்திக்கொண்டேன். 7 நாட்கள் தனிமை மற்றும் சிகிச்சைக்கு பிறகு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் ஆகி இருக்கிறது.

கொரோனா நீங்கியது என்ற முடிவை கேட்டதும் இவ்வளவு மகிழ்ச்சி அடைவேன் என்று எண்ணிப்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரசிகர்களின் அன்புக்கும் பிரார்த்த னைக்கும் எனது நன்றி எனக் கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து நடிகர் ராம் சரண் தற்போது குணம் அடைந்திருக்கிறார். கடந்த டிசம்பர் 29ம் தேதி ராம் சரண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் குடும்பத்தினருடன் புத்தாண்டு விழாவிலும் பங்கேற்காமல் தனிமையில் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று மாலை வெளியிட்ட மெசேஜில் தனக்கு கொரோனா தொற்று குண மாகிவிட்டதாக தெரிவித்தார் அவர் கூறும்போது, கொரோனா டெஸ்ட் மீண்டும் எடுத்து பார்த்ததில் எனக்கு கொரோனா குணம் ஆகி இருந்தது தெரிந்தது. மீண்டும் திரும்ப வந்த உணர்வு ஏற்பட்டது என்றார். விரைவில் அவர் ஆச்சார்யா மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை