Saturday, May 15, 2021

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா? சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்..

by Chandru Jan 15, 2021, 14:54 PM IST

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது கோவாவின் அழகிய சூழலில் தங்கி இருக்கிறார். ஆனால் வெயிலிலும் மணலிலும் நடந்து நேரத்தை வீணடிக்காமல் தனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே சர்க்கார் (2005), சர்க்கார் ராஜ் (2008) மற்றும் சர்க்கார் 3 (2017) ஆகிய படங்களில் அமிதாப்பை இயக்கிய வர்மா கடந்த சில ஆண்டுகளாக, சர்க்கார் 4ம் பாகம் வெளிவருவது குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும், பச்சனுடன் பணிபுரிய வேறு திட்டங்கள் இருப்பதாகவும், சர்க்கார் 4 நிச்சயமாக அவற்றில் ஒன்றல்ல என்கிறார்.

இதுபற்றி வர்மா கூறும்போது, "சர்க்கார் 4 நிச்சயமாக என் மனதில் இல்லை, ஏனென்றால் இது ஒரு பாத்திரத்தையும் கதையையும் மிகைப்படுத்திக் கொள்ளும். காட்பாதரின் (1972, 1974 மற்றும் 1990) மூன்று படத் தொடர்களைப் பார்த்தாலும், பிரான்சிஸ் ஃபோர்டு கொப் போலா நான்காம் பாகத்தை உருவாக்க யாரும் அனுமதிக்கவில்லை. அவர்கள் அதை நல்ல காரணத்துடன் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எதையாவது இழுத்துக் கொண்டே சென்றால், அது அதன் தாக்கத்தை இழக்கிறது. பச்சனுடன் ஒரு படம் மீண்டும் செய்வேன். ஆனால் அது புதிதான ஒன்றாக இருக்கும். நான்காவது முறையாக சர்க்கார் செய்ய நான் அவரிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. உண்மையில், என் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது, ஆனால் COVID-19 எனது திட்டங்களைத் தடுத்து வைத்திருக்கிறது. நான் தற்போது நிறையப் படங்கள் உருவாக்கி வருகிறேன்.அதையெல்லாம் முடிக்க வேண்டும் அமிதாப்பிற்காக நான் நினைவில் வைத்திருப்பதை மீண்டும் செய்வேன். இவ்வாறு வர்மா கூறினார்.

2017 ஆம் ஆண்டில் சர்க்கார் 3 வெளியான பிறகு பாலிவுட்டிலிருந்து தனது கவனத்தை தென்னிந்திய படங்கள் மீது திருப்பினார் வர்மா. ஒடிடிக்காக பல அடல்ட் படங்களை உருவாக்கி வருகிறார். மேலும் ஜெயலலிதா மரணம் பற்றிய படமும் உருவாக்கவிருப்பதாக அவர் அறிவித்திருந்தார். இயக்குனர் ராம் கோபால் வழக்கமாகப் பிரபலங்களை வம்பிழுப்தே வேலையாக வைத்திருக்கிறார். ஆனால் கே ஜி எஃப் 2 பட இயக்குனர் பற்றிப் புகழ்ந்து மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 டீஸர் சமீபத்திய பிரபல படங்களின் சாதனைகளை அடித்து நொறுக்கியிருப்பதை ராம் கோபால் வர்மா திடீரென்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். கன்னட திரையுலகின் உண்மையான திறனை நிரூபித்ததற்காக இயக்குனர் பிரசாந்த் நீல் மீது பாராட்டி இருக்கிறார்.
இதுபற்றி வர்மா கூறும் போது,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடப் படங்களையும் அவற்றின் வணிகத் திறனையும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் பிரசாந்த் நீல் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் ஆகியோர் தங்கள் கே.ஜி.எஃப் திரைப் படத்துடன் கன்னட திரையுலகின் பக்கம் அனைத்து கண்களையும் ஈர்த்துள்ளனர்.
வலிமைமிக்க பாகுபலி 2 மூன்று ஆண்டுகளில் 11 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது, ஆர்.ஆர்.ஆர் டீஸர்கள் மூன்று மாதங்களில் 3.8 கோடியைப் பெற்றுள்ளது ஆனால் கே.ஜி.எஃப் 2 டீஸர் 14 கோடி பார்வைகளை அடைய மூன்று நாட்கள் மட்டுமே ஆனது என தெரிவித்திருக்கிறார் வர்மா.

You'r reading பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா? சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை