புதிய காதலனுக்கு ஓவியா முத்தம்..

களவாணி படத்தில் நடிகை ஓவியா அடுத்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்றார். அப்போது அதில் பங்கேற்ற நடிகர் ஆரவுடன் காதல் மலர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆரவ் அவரை விட்டு விலகினார். இதில் மனம் நொந்த ஓவியா பிக்பாஸ் வீட்டிலேயே நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். பிறகு அங்கிருந்து வெளியில் வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஓவியா ஆர்மி என்ற பெயரில் உருவாகினார். மீண்டும் நடிப்பில் கவனம் செய்த எண்ணிய ஓவியாவுக்குப் படங்கள் பொருத்தமாக அமையவில்லை.

அடல்ட் படங்களில் நடித்ததால் அவருக்கு இருந்த மவுசு குறைந்தது. பிக்பாஸ் வீட்டில் ஆரவுடன் மலர்ந்த காதல் மீண்டும் அவர்களுக்குள் மலர்ந்தாக கூறப்பட்டது. ஆனால் இதை இருவரும் மறுத்து வந்தனர். தாங்கள் நண்பர்களாக இருப்பதாகத் தெரிவித்தார் ஓவியா. இந்நிலையில் ஆரவ் வேறு வொருவரை மணந்தார். அப்போது ஓவியா, தான் சிங்கிள் என்று மெசேஜ் பதிவு செய்தார். இந்நிலையில் ஓவியா இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்து லவ் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓவியாவுக்கு லவ்வர் கிடைத்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். ஓவியா தற்போது ராஜ பீமா மற்றும் சம்பவம் ஆகிய தமிழ் பிளாக காபி என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

READ MORE ABOUT :