எனக்கு கொரோனா இல்லை நம்பாதீங்க. நடிகை அலறல்..

Advertisement

கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் பலருக்கு ஏற்பட்டது. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்ச்ன, சரத்குமார், ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். பிறகு அனைவரும் தற்போது படப் பிடிப்புகளில் கலந்து கொண்டு நடிக்கின்றனர். ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்று குணமாகி மாதக் கணக்கில் படப்பிடிப்பில் பங்கேற்கத் தயங்கினார். இதனால் கொரோனா லாக் டவுன் தளர்வில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் கால தாமதம் ஆகி வந்தது.

ஒரு வழியாக 2020 ம் ஆண்டு முடியும் வரை ஐஸ்வர்யாராய் கால்ஷீட் தரவில்லை. இந்த ஜனவரியில்தான் அவர் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார். அதன்படி ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். இவரும் சரத்குமாரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. சரத்குமாரும் கொரோனா தொற்றால் கடந்த மாதம் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார். படப் பிடிப்பில் தற்போது கடுமையான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தளத்திற்குள் வருவதற்கு முன் வெப்ப அளவு ஒவ்வொருவருக்கும் சோதனை செய்து காய்ச்சல் இல்லாத சீரான நிலையில் இருக்கிறார்களா எனப் பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில் டோலிவுட் பிரபல நடிகை அனுசுயா பரத் வாஜுக்கு கொரோனா தொர்ர்று அறிகுறி ஏற்பட்டது. இவர் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சமந்தா தெலுங்கில் நடித்து ஹிட்டான ரங்கஸ்தலம் படத்திலும் முக்கிய வேடத்தில் அனுசுயா நடித்திருந்தார். தமிழில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் சில்க் ஸ்மிதாவாக அனுசுயா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது ஆனால் அதை அவர் மறுத்தார்.அனுசுயா தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பற்றிக் கூறும்போது,சமீபத்தில் நான் கர்னூல் ஊருக்குச் சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்தேன் ஆனால் கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவிருக்கிறேன். சமீபத்தில் என்னைச் சந்தித்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றார்.

ஒரு சில நடிகைகள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வந்த தகவலை மறுத்தனர். தமிழில் வெளியான பார்த்திபனின் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்தவர் ரேணு தேசாய். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது அதையறிந்து கோபம் அடைந்தார். எனக்கு கொரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை. வீண் வதந்தி பரப்பாதீர்கள் என்று கூறினார். ரேணு தேசாய் டோலிவுட் நடிகர் பவன் கல்யாணின் முதல் மனைவி. இருவரும் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் மற்றொரு நடிகை தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவித்திருக்கிறார். தனுஷ் நடித்த அனேகன் படத்திலும் மற்றும் திரெளபதி படத்திலும் டாக்டராக நடித்தவர் லேனா. இவர் மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் இவர் லண்டலிருந்து இந்தியா திரும்பினார் பெங்களுரு விமான நிலையத்தில் கொரோனா சோதனை நடை பெற்றது. பிறகு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனால் அவருக்கு கொரோனா என்று தகவல் பரவியது. ஆனால் தனக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. லண்டனிலிருந்து வந்ததால் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. நானாகவே என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன் அவ்வளவு தான். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக நெட்டில் தகவல் பரவுகிறது. அதில் உண்மை இல்லை என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>