கொரோனா காலகட்டம் திரையுலகினருக்கு பெரும் சோதனைகளையும், பெரிய இழப்புகளையும் ஏற்படுத்தி விட்டது. 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேறு எப்போதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். இது எதிர்பாராத ஷாக்காக திரையுலகினருக்கு அமைந்தது. இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரிக்கிறது. இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் அடுத்தடுத்த நாட்களில் மாரடைப்பில் மாரடைப்பில் மரணம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி படங்களில் நடித்து வந்தனர். அவர்களது திடீர் மரணம் மீண்டும் திரையுலகினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பிரபல இசை அமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்வதாக வீடியோவில் தோன்றி மெசேஜ் பகிர்ந்து விட்டு சேர்ந்தார் அடுத்த சில நாளில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சுமார் 50 நாட்கள் மருத்துவவமனையில் உயிருக்காகப் போராடி இறந்தார். கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி இருவரும் மாரடைப்பிலும். நடிகர் தவசி புற்றுநோய் பாதித்தும் இறந்தனர். டிவி நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் தயாரிப்பாளர்கள் வி.சுவாமி நாதன், கே.பாலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இன்னும் தெலுங்கு, கன்னட திரையுலகில் சில சீனியர் இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் இறந்தனர்.இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியாகப் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தவர் படம் வெளியாவதற்கு முன்பே இறந்திருக்கிறார்.திருப்பூர் சாஷினி புரடக்ஷன் தயாரிக்கும் படம் திருமாயி. இதில் ஹீரோவாக நடித்து வந்தார் தேனி பாலா. இப்படத்தை சாலோமோன் கண்ணன் இயக்கி வருகிறார். ஹீரோ தேனிபாலாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்த புற்று நோய் இருந்தது தெரிந்தது.
இவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனில்லாமல் பொங்கல் தினத்தன்று காலமானார். தேனி பால நிஜபெயர் ராம்சந்த். சினிமாவுக்காக தேனி பாலா எனப் பெயர் மாற்றிக்கொண்டார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் கலைப்புலி சேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 46 வயதாகும் தேனி பாலாவின் உடல் சீவலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். தேனி பாலாவுக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.