சத்தியமங்கலம் காட்டுக்குள் ஹீரோவான காமெடி நடிகர்..

நகைச்சுவை நடிகர்கள் ஹீரோக்களாக நடிப்பது நாகேஷ் முதலே தொடர்கிறது, நீர்குமிழி, சர்வர் சுந்தரம் என சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, வடிவேலு, விவேக், யோகிபாபு வரை காமெடி நடிகர்கள் ஒரு சில படங்களில் ஹீரோக்களாக நடித்தனர். நடிகர் சந்தானம் காமெடி வேடத்திலிருந்து ஹீரோவாக நடிக்கத் தொடங் கியபிறகு மீண்டும் காமெடி வேடங்களுக்கு வராமல் ஹீரோவாகவே தொடர்கிறார்.இந்த நிலையில் நடிகர் செந்தில் இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் முதன் முறையாக புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகர் விதார்த்தின் நடிப்பில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் சங்கையா இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கச் செந்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதில் ஆயுள் தண்டனை கைதியாக மிகவும் மென்மையான கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்க உள்ளார். இதில் செந்திலுக்கு ஜோடி கிடையாது. ஓரிரு மாதங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தற்போது மற்றொரு காமெடி நடிகர் பரோட்டா சூரி ஹீரோ ஆகி இருக்கிறார். வெண்ணிலா கபடி குழுவில் பிரபலமான சூரி தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான் அவரை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் புதிய படம் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார்.வெற்றி மாறனும், சூரியும் தற்போது சத்தியமங்கலம் காட்டில் படத்தின் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். முன்னதாக, விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார். இருப்பினும், காடுகளின் தட்பவெப்பநிலை காரணமாக, விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகினார், அவருக்குப் பதிலாக பாரதிராஜா நடிக்கிறார்.இந்த படத்தின் கதை ஜெய மோகன் எழுதிய 'துனைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படம் இளையா ராஜாவுடன் வெற்றி மாறன் இணையும் முதல் படம்.இது தவிர, வெற்றி மாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். தற்போதைய படத்தை முடித்த பின்னர் சூர்யா படத்தின் படப் பிடிப்பை தொடங்குவார். இதை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :