நாற்காலி படத்தில் எஸ்பிபி பாடிய எம்ஜிஆர் பாட்டு.. அமீர் நடிப்பில் படமானது..

Advertisement

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த சில நாட்களில் ஆரது உடல்நிலை மோசமானது, சில வாரங்களுக்கு கொரோனா தொற்று குணமானாலும் அவரது நுரையீரல் பாதிப்பு குணம் அடையவில்லை. 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போராடி இறந்தார். எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவதற்கு முன் நாற்காலி என்ற படத்திற்காக நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு என்ற பாடலை பாடினார். இப்படத்தில் அமீர் நடிக்கிறார். வி.இசட் துரை இயக்குகிறார். பா.விஜய் பாடலை எழுதினார். இப்பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இப்பாடல் காட்சியில் அமீர் நடித்தார். எம் ஜி ஆர் புகழ் பாடும் அப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அது வருமாறு:


பல்லவி:
நெஞ்சமுண்டு நேர்மையுண்டூ சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர்‌ வாத்தியாரு.!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர்‌ வாத்தியாரு.!
மூன்றெழுத்து மந்திரத்தின்‌ சக்தி பாரு.!!
அந்த மன்னாதி மன்னன்‌ பெயர்‌ எம்‌.ஜி.ஆரு.!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டூ சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர்‌ வாத்தியாரு!
மூன்றெழுத்து மந்திரத்தின்‌ சக்தி பாரு.!!
அந்த மன்னாதி மன்னன்‌ பெயர்‌ எம்‌.ஜி.ஆரு.!
அவர்‌ அண்ணனின்‌ தம்பியே
ஈழத்‌ தம்பியின்‌ தோழனே
அவர்‌ மக்களின்‌ தலைவனே
அவர்‌ வழியில்‌ நான்‌ ரசிகனே
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர்‌ வாத்தியாரு.!
மூன்றெழுத்து மந்திரத்தின்‌ சக்தி பாரு.!
அந்த மன்னாதி மன்னன்‌ பெயர்‌ எம்‌.ஜி.ஆரு.!
தன்னந்‌ தனியாய்‌ தமிழ்நாட்டில்‌ - ஒரு
ஏழைத்தாயவள்‌ சிறுகூட்டில்‌
வாழ்வைத்‌ துவக்கிய திரைக்கலைஞன்‌
தென்னாட்டின்‌ பெருந்தலைவன்‌
தோட்டா அவரை ஜெயித்ததில்லை - அவர்‌
தோட்டத்தில்‌ பாசம்‌ குறைந்ததில்லை
மக்கள்‌ திலகத்தின்‌ மணிமகுடம்‌
இதுநாள்‌ வரை இறங்கவில்லை
இதயக்கனியாய்‌ ஒரே மனம்‌
இமயமலையாய்‌ எழும்‌ குணம்‌
எதையும்‌ ஜெயிக்கும்‌ ஒரே பலம்‌
என்றும்‌ நிலைக்கும்‌ ஒரே புகழ்‌
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர்‌ வாத்தியாரு!
மூன்றெழுத்து மந்திரத்தின்‌ சக்தி பாரு!
அந்த மன்னாதி மன்னன்‌ பெயர்‌ எம்‌.ஜி.ஆரு.!

சரணம்‌ 2:
புரட்சித்‌ தலைவன்‌ என்றழைத்தோம்‌ - அந்த
பொன்மனச்‌ செம்மலை தினம்‌ ரசித்தோம்‌
தன்னை நாட்டுக்கே தந்ததினால்‌
தமிழ்நாட்டை நாம்‌ கொடுத்தோம்‌
வலது கையிலே கடிகாரம்‌ - ஊர்‌
வறுமை தீர்த்தது அவர்‌ அதிகாரம்‌
வாழும்‌ போதிலே வரலாறு - அவர்‌
போல்‌ இங்கு வேறாரு.?
கொடுத்துச்‌ சிவந்த வள்ளல்‌ கரம்‌
கொஞ்சிச்‌ சிரிக்கும்‌ பிள்ளை மனம்‌
தோல்வி அறியா ஒரே முகம்‌
நாளை நமதே என்னும்‌ திடம்‌
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர்‌ வாத்தியாரு.!
மூன்றெழுத்து மந்திரத்தின்‌ சக்தி பாரு.!
அந்த மன்னாதி மன்னன்‌ பெயர்‌ எம்‌.ஜி.ஆரு.!
அவர்‌ அண்ணனின்‌ தம்பியே
ஈழத்‌ தம்பியின்‌ தோழனே
அவர்‌ மக்களின்‌ தலைவனே
அவர்‌ வழியில்‌ நான்‌ ரசிகனே
இவ்வாறு அந்த பாடல் இடம்பெறுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>