தலைவியில் எம்ஜிஆர் ஜெயலலிதாவாக நடிக்கும் ஜோடி.. படம் வெளியீட்டு பரவசம்..

எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில், “தலைவி” படத்தின் சிறு துணுக்கை வெளியிட்டு கௌரவுத்துள்ளது. கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “தலைவி” இவ்வாண்டின் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக விளங்குகிறது. முன்னதாக இப்படத்திலிருந்து படங்கள் வெளியிடப்பட்டாலும் ஜோடியாக கங்கனா, அரவிந்த்சாமி இருந்த ஸ்டில் வெளியிடப்படவில்லை. புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் 104 பிறந்த நாளை முன்னிட்டு “தலைவி” படக்குழுவினர் சிறப்பு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர். மேலும் தலைவி ஜெயலலிதாவின் வாழ்விலும் வளர்ச்சியிலும் மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தவர். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ எம் ஜி ஆரின் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முனேற்றத்திற்கும் அவர் செய்திருக்கும் பெரும்பங்கினை எடுத்துக்காட்டுவதாக அழகாக அமைந்திருக்கிறது. படக்குழுவினர் முதல் முறையாக கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை, புதிய தோற்றத்துடன் வெளியிட்டுள்ளனர். விஷுவல்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா இருவரும் திரையுலகில் சூப்பர்ஸ்டார்களாக, ரசிகர்களின் விருப்ப நாயகர்களாக, கோலோச்சிய காலத்தை மீண்டும் மீளுரு வாக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதாக உள்ளது. “தலைவி” பன்மொழிகளில் உருவாகும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தினை இயக்குனர் விஜய் இயக்குகிறார். விஷ்ணு வர்தன் இந்தூரி, சய்லேஷ் ஆர் சிங் விபிரி மீடியா (Vibri Media) நிறுவனம் மற்றும் கர்மா மீடியா (Karma Media) நிறுவனம் சார்பில் கோதிக் எண்டர்டெயின்மெண்ட் (Gothic Entertainment) மற்றும் ஸ்பிரிண்ட் பிலிம்ஸ் (Sprint Films) உடன் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் கதையை விஜயேந்திர பிரசாத் எழுத, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, சமுத்திர கனி, நாசர் நடித்துள்ளனர். கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பிரசாத், இணை தயாரிப்பு ஹிதேஷ் தக்கர், திருமால் ரெட்டி.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :