அண்ணாதுரை படம் எப்படி?

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை’, நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் கதானாயகியாக டயானா சம்பிகா, மஹிமா மற்றும் ராதாரவி,காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

Annadurai

இப்படம் குறித்து இயக்குனர் சீனிவாசன் கூறும்போது, “இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன். சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குனர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன், அவர்களுக்கு நன்றி.

வசந்தபாலனிடம் கிளாஸாக எப்படி படம் எடுப்பது, சுசீந்திரனிடம் அழுத்தமான கமெர்சியல் படம் எடுப்பது எப்படி, நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன். அண்ணாதுரை கதையை விஜய் ஆண்டனியை தவிர்த்து யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால் முடியும். அண்ணாதுரை படத்துக்கு அவரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது.

நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு எடிட்டராகவும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. அண்ணாதுரை தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படம்.” என்றார் அறிமுக இயக்குனர் சீனிவாசன்.

READ MORE ABOUT :