கடவுளை இழிவுபடுத்திய நடிகரை கைது செய்.. மீண்டும் சிக்கலில் சிக்கிய ஹீரோ..

Advertisement

பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்களது நடிப்பு பணியைப் பார்த்தோமா சம்பளத்தை வாங்கி பெட்டியை நிரப்பினோமா என்று சைலண்டாக நழுவிச் செல்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் ஏடாகூடமாகக் கருத்துச் சொல்லிச் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் டாப் ரேங்கில் இப்போதைக்கு நடிகை கங்கனா ரனாவத்தான் அதிக சர்ச்சை கருத்துக்கள் கூறி வழக்குகளில் சிக்கி இருக்கிறார். இரு மதத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் விதமாக சமூக வலைத் தளத்தில் கருத்து பகிர்ந்ததாக அவர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இது தொடர்பாக மூன்று முறை போலீசார் விசாரணைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை இறுதியாக கோர்ட் கெடு விதித்த நிலையில் வேறு வழியின்றி போலீஸ் விசாரணைக்குக் கடந்த வாரம் ஆஜரானார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தேசிய நலனுக்காக குரல் கொடுத்து வருகிறேன் அதனால் எனக்கு ஆதரவாக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருநதார். அவரை போலவே பிரபல நடிகர் ஒருவர் 2வது முறையாகச் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் மூலம் தமிழ், தெலுங்கில் நடிக்கவிருக்கிறார். ஆதி புருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் ராவணன் எவ்வளவு மனித தன்மையுடன் நடந்துகொண்டான் என்பதை என் கதாபாத்திரம் விளக்கும் என்று சயீப் குறிப் பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு இந்து மதத்தினர் மற்றும் பாஜ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராவணன் ஒரு அரக்கன் அவனிடம் மனிதத் தன்மை கிடையாது. அந்த பாத்திரத்தை உயர்த்தி சொல்வதற்காக இப்படி சயீப் அலிகான் கருத்து கூறி உள்ளார். உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து சயீப் அலிகான பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தற்போது தாண்டவ் என்ற வெப் சிரீஸில் நடிக்கிறார் சயீப். இதில் இந்து கடவுள்களை பற்றியும் இந்து மத நம்பிக்கைகள் பற்றி தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உடனடியாக இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் நடிகர் சயீப் அலிகானை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிஸன்களும், பா ஜ கட்சியினரும் சமூக வலைத் தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பேன் தண்டவ நவ்( BanTandavNow) என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>