இந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி..

Advertisement

நடிகை சமந்தா தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நீ தானே என் பொன் வசந்தம், நான் ஈ. கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே நேரம் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இரு மொழியிலும் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகும் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாராவும் இப்படத்தில் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கில் 8 மாதமாக வீட்டில் இருந்த சமந்தா மாடித் தோட்டம் அமைப்பது. யோகா மற்றும் பேஷன் டிசைனிங் கற்பது எனப் பொழுதைக் கழித்தார். தினமும் யோகா பயிற்சி செய்யும் சமந்தா உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார். மேலும் பேஷன் டிசைனிங் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தியும் வருகிறார். இதற்கிடையில் தி பேமலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நெகடிவ் வேடம் ஏற்று நடித்து வருகிறார். இது இந்தி வெப் சீரிஸ். இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை ஏற்க மறுத்து விடுகிறார் சமந்தா.

ஆனால் இந்தி ரசிகர்களிடம் தனது நடிப்பு சென்று சேர வேண்டும் என்று எண்ணுகிறார். அதனால் தான் இந்தி வெப் சீரிஸில் அவர் நடிக்கிறாராம். அவரது இந்த புதுபாலிசி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த மாதம் இந்த வெப் சீரிஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.சமீபத்தில் சமந்தா மும்பை சென்றார். அங்கிருந்தபடி வெப் சீரிஸ் பற்றி பிரபலப்படுத்தி வருகிறார். கணவர் நாக சைதன்யாவை கலாய்ப்பதில் முதல் ஆளாக இருப்பவர் சமந்தா. அதை சைதன்யா சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் தமாஷாகவே எடுத்துக் கொள்கிறார்.

இது இருவருக்கும் உள்ள புரிதல் என்பதால் இதுபோன்ற சமயங்களில் இருவருக்கும் சண்டை சச்சரவு எதுவும் வருவதில்லை. சமீபத்தில் நாக சைதன்யாவின் புகைப்படம் வெளியானது. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் எங்கோ பார்த்த படி மேஜை மீது அமர்ந்திருக்கும் அந்த புகைப் படம் சமந்தாவின் கவனத்தைக் கவர்ந்தது. அதைப் பார்த்து சமந்தா கமெண்ட் பகிர்ந்தார். அதில், என்னைப்பற்றியா யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கலாய்தார். ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கும் நாக சைதன்யாவை சமந்தா இப்படி கலாய்த்தது ரசிகர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>