கமல்ஹாசனுக்கு மீண்டும் காலில் அறுவை சிகிச்சை.. பிரச்சாரம் முடித்து மருத்துவ ஓய்வு..

Advertisement

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தான் எம்ஜிஆரின் வாரிசு என்றதுடன் ஆட்சி மாற்றம் வேண்டும் நேர்மையான உழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். எம்ஜிஆர் வாரிசு என்று அவர் பேசியதால் அதிமுக தலைவர்கள் அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் முடிந்து தற்போது சென்னை திரும்பி இருக்கும் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:தமிழகத்தைத் தலை நிமிரச்‌ செய்ய 'சீரமைப்போம்‌ தமிழகத்தை' எனும்‌ முதல்‌ கட்ட தேர்தல்‌ பிரச்சாரத்தைப்‌ பூர்த்தி செய்திருக்கிறேன்‌. ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் ‌கிலோ மீட்டர்கள்‌ பயணித்து தமிழ்‌ மக்களைச்‌ சந்தித்திருக்கிறேன்‌. மாற்றத்திற்கான மக்கள்‌ எழுச்சியை ண்ணாரக்கண்டு திரும்பியிருக்கிறேன்‌.அது போலவே, கொரானா பொது முடக்கத்தின்‌ போது துவங்கிய 'பிக்பாஸ்‌ - சீசன்‌ 4' தொலைக்காட்சி நிகழ்ச்சியையும்‌ வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்‌. இதுவும்‌ மக்களுடனான பயணம்தான்‌. நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம்‌ உரையாடியதும்‌, உறவாடியதும்‌ மகிழ்ச்சியூட்டுகிறது.க

சில ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஏற்பட்ட விபத்தில்‌ காலில்‌ ஒரு அறுவைச்‌ சிகிச்சை செய்திருந்தேன்‌. அதன்‌ தொடர்ச் சியாக, இன்னொரு சர்ஜரி (அறுவை சிகிச்சை) செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள்‌ அறிவுறுத்தி இருந்தார்கள்‌. அதை மீறித்தான்‌.சினிமா வேலைகளும்‌, அரசியல்‌ சேவைகளும்‌ தொடர்ந்தன. பிரச்சாரத்தைத்‌ துவங்கும் போதே காலில்‌ நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின்‌ அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில்‌ ஒரு சிறு அறுவைச்‌ சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்‌. சில நாட்கள்‌ ஓய்வுக்குப்‌பின்‌ மீண்டும்‌ என்‌ பணிகளைப்‌ புதிய விசையுடன்‌ தொடர்வேன்‌.

மக்களை நேரில்‌ சந்திக்க இயலாது எனும்‌ மனக்குறை யை தொழில்நுட்பத்தின்‌
வாயிலாகப்‌ போக்கிக்கொள் ளலாம்‌. இந்த 'மருத்துவ விடுப்பில்‌' உங்களோடு இணையம்‌ வழியாகவும்‌, வீடியோக்கள்‌ வழியாகவும்‌ பேசுவேன்‌. மாற்றத்திற்கான நம்‌ உரையாடல்‌ இடையூறின்றி நிகழும்‌.என்‌ மண்ணுக்கும்‌, மொழிக்கும்‌, மக்களுக்கும்‌ சிறு துன்பம்‌ என்றாலும்‌ என்‌ குரல்‌ எங்கும்‌ எப்போதும்‌ எதிரொலித்தபடிதான்‌ இருக்கும்‌. இப்போதும்‌ அது தொடரும்‌. ஒளி பரவட்டும்‌.இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>