Friday, May 14, 2021

பெரிய திரை அரங்குகள் என்னவாகும்? புதிதாய் மலரும் குட்டி தியேட்டர்கள்..

by Chandru Jan 18, 2021, 10:53 AM IST

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த காலத்தில் பொழுது போக்கு சினிமா மட்டும்தான் என்ற நிலையில் இருந்தது. பல தியேட்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து பார்க்கும் தியேட்டர்களாக கட்டப்பட்டது. காலப்போக்கில் டிவி, டிவிடி, விசிடி, இணையதளம், யூ டியூம் இன்றைக்கு ஒடிடி என்ற நவீன மாற்றங்கள் வந்திருப்பதால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரும் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துவிட்டது. பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸானால் மட்டுமே அதுபோன்ற அரங்குகள் ஒரு சில நாட்களுக்கு நிரம்பும் என்ற நிலை உருவாகிவிட்டது. சிறிய படங்களுக்குக் கூட்டம் வருவது குறைந்துவிட்டது.

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. இதனால் வருமானம் இன்றி பலகோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் கூறினர். இந்த காலகட்டத்தில் மூடப்பட்ட சில தியேட்டர்கள் திறக்கப்படாமல் வர்த்தக வளாகமாக மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதும் 50 சதவீத டிக்கெட் தான் அனுமதி என்பதால் வசூல் குறைந்து காணப்படுகிறது. இதனால் பெரிய திரை அரங்குகளை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிறிய திரை அரங்குகளாக மாற்றிக் கொள்ள சில திரை அரங்கு உரிமையாளர்கள் அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் படத் தயாரிப்பாளர் கே.ஈ. ஞான வேல்ராஜா புதிய தியேட்டர்கள் திறந்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பல்லாண்டுகளாக பல வெற்றி படைப்புகளையும், தரமான படங்களையும் தயாரித்து, வழங்கி, மற்றும் விநியோகித்தும் வருகிறார். தென்னிந்திய திரையுலகில் தயாரிப்பாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக வலம்வரும் ஞானவேல் ராஜா 2021 ஆண்டிலும் பல ஆச்சர்யகரமான படைப்புகளைத் தயாரித்து வரிசையாக வெளியிட காத்திருக்கிறார். தயாரிப்பு உலகில் பெரும் வெற்றியைக் கண்டிருக்கும் அவர் தற்போது புதியதொரு பயணத்தை தொடங்கியிருக்கிறார். கிரீன் சினிமாஸ் (Green Cinemas) எனும் பெயரில் தொடர் தியேட்டர் குழுமமாக விரைவில் பரிமளிக்கப் போகும் வகையில் பாடி ராதா (சென்னை) யில் முதல் திரையரங்கைத் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து கே.ஈ. ஞானவேல் ராஜா கூறியதாவது:சாய் நல்லாசியோடு கிரீப் சினுமாஸ் (GREEN CINEMAS) குழுமம் சார்பில் எங்களின் முதல் திரையரங்கைப் பாடியில் (அண்ணா நகர் அருகில்) கிரீன் சினிமாஸ் - பாடி ராதா எனும் பெயரில் துவங்கியுள்ளோம். இரண்டு திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் ஒன்று 384 இருக்கைகளுடனும் மற்றது 142 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்கு தற்காலத்தில் அனைத்து நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் 4K Projection ATMOS Sound மற்றும் 3D Projection கொண்ட தாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் மிகச்சிறப்பான திரை அனுபவத்தை பெரும் வகையில் மிக விசாலமான ஹால், மிகப்பெரிய இடம் கொண்ட கழிவறை வசதி, சுகாதாரம் பேணும் வகையிலான திண்டபண்டங்கள், குளிர் பானங்கள் கொண்ட உணவகம் இத்திரையரங்கில் அமைந்துள்ளது. கிரீன் சினிமாஸ் உடைய முக்கிய குறிக்கோள் ரசிகர்கள் இந்த பொது முடக்கக் காலத்தில் மிகப்பாதுகாப்பான உணர்வுடன் ஒரு கொண்டாட்டமான அனுபவத்தைப் பெறச் செய்வதென்பதே ஆகும். இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன். இவ்வாறு கே.ஈ.ஞானவேல்ராஜா கூறினார்.

You'r reading பெரிய திரை அரங்குகள் என்னவாகும்? புதிதாய் மலரும் குட்டி தியேட்டர்கள்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை