விஜய் மகன் நடிப்பாரா? இயக்குனர் ஆவாரா?

Advertisement

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவிருந்த நிலையில் கொரோனா லாக்டவுனலால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. தியேட்டர்களும் கடந்த 8 மாதம் மூடப்பட்டிருந்தது. சென்ற நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் 100 சதவீத அனுமதிக்குப் பிறகு மாஸ்டர் வெளியிட முடிவு செய்யப்பட்டது. தியேட்டர் அதிபர்கள் மற்றும் நடிகர் விஜய், சிம்பு போன்றவர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று நூறு சதவீத டிக்கெட் அனுமதி தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, கொரோனா முற்றிலுமாக ஒழியாத நிலை யல் நூறு சதவீத அனுமதி கூடாது என்றனர்.

ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நூறு சதவீத அனுமதி மறுக்கப்பட்டு 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் ஏற்கனவே அறிவித்தபடி மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது.மாஸ்டர் படத்துக்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. 4 நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இது திரையுலகினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்டர் படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் வேடிக்கை பார்க்கும் பழைய படத்தை விஜய் ரசிகர்கள் இப்போது பகிர்ந்துள்ளனர். இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் வீடியோ கேம் ஆடும்போது அவரை விஜய் கட்டிப்பிடித்து கலாட்டா செய்வதுபோல் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை வெளியிட்ட ரசிகர்கள் விவாதத்தையும் கிளப்பிவிட்டிருக்கின்றனர். ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்க வருவார் என்றும் அவர் இயக்குனர் ஆவார் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் பகிர்கின்றனர். ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக தான் அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே விஜய்யிடம் விஜய் சேதுபதி கூறி உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் நடிப்பார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவர் வெளி நாட்டில் திரைப்படத் துறை சம்பந்தமாகப் படித்த நேரத்தில் குறும்படம் இயக்கினார். எனவே அவர் இயக்குனராகவே அறிமுகமாவார் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் ஜேசய் சஞ்சய் மனதில் என்ன உள்ளதோ அதை செய்வதற்குத் தான் தடை எதுவும் சொல்லப்போவதில்லை என்று ஏற்கனவே விஜய் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>